சன்டிவியின் அன்பே வா சீரியலில் அருள்வாக்கு வேதவல்லியாக நடித்து அசத்துகிறார் நடிகை கீர்த்தனா. தமிழ் சினிமாவில் 1990களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஹீரோயின் மற்றும் துணை நடிகையாக நடித்தவர். 1992ஆம் ஆண்டு விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. அதன்பிறகு சூரியன் சந்திரன், உங்கள் அன்பு தங்கச்சி, பவித்ரா, தாய் தங்கை பாசம், மண்ணை தொட்டு கும்பிடனும், வெற்றி முகம், மாண்புமிகு மாணவன், மைனர் மாப்பிள்ளை படத்தில் அஜித்துடன், லேடிஸ் டாக்டர், போன்ற படங்களில் நடித்தார்.
Advertisment
தமிழில் இவர் சாமி படத்தில் விவேக் மனைவியாக நடித்தது நல்ல ரீச் ஆனது. இன்றவும் அந்த காமெடி கேரக்டர்கள் பேசப்படுகிறது. தொடர்ந்து காதல் கிருக்கன், இப்படிக்கு என் காதல் போன்ற பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார் கீர்த்தனா. இவர் தெலுங்கில் முதன் முதலில் 1994ல் சுந்தர வதன சுபலட்சுமி முகுடா என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆனார். மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . பல படங்களில் காமெடி ரோல் நடித்திருந்தார். கீர்த்தனா கடைசியாக தமிழ் காதல்-நகைச்சுவைத் திரைப்படமான கல்யாண சமயல் சாதம் படத்தில் இசையமைப்பாளர் அரோராவுடன் இணைந்து பணியாற்றினார்.
மூன்று மொழிகளில் சுமார் 40 திரைப்படங்கள் நடித்தவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். தமிழ் சின்னத்திரையில் இவரது முதல் அறிமுகம் சன்டிவியில் தான். அக்ஷயா என்ற சீரியலில் நடித்தார். பிறகு ராஜ் தொலைக்காட்சியில் காத்திருக்க ஒருத்தி, விஜய் டிவியில் சலனம் மீண்டும் சன்டிவியில் ரோஜா, கோலங்கள், ராஜ ராஜேஸ்வரி, கலைஞர் டிவியில் நம்ம குடும்பம், சன்டிவியில் அக்னி நட்சத்திரம், தற்போது லேட்டஸ்டாக ரோஜா மற்றும் அன்பே வா தொடரில் அருள்வாக்கு வேதவல்லியாக வந்து கலக்குகிறார். ஜீ தமிழின் திருமதி ஹிட்லர் தொடரிலும் நடித்து வருகிறார் கீர்த்தனா. சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த இந்த 90's நடிகை தற்போது சீரியலில் அசத்தி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil