தைரியமும் நம்பிக்கையும் தந்தது அம்மாதான்…கண்ணான கண்ணே மீரா பர்சனல் ஸ்டோரி

Kannana Kanne serial : அப்பாவின் அன்புக்காக ஏங்கும் மகளின் கதை என்பதால் பர்ஸனாலா டச் ஆகி சீரியலுக்கு மீரா ஓகே சொன்னாராம்.

கண்ணான கண்ணே பாடலை கேட்டதும் தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் படத்தின் நியாபகத்திற்கு வரும் என்றால் சன் டிவி ரசிகர்களுக்கு நியாபகம் வருவது கண்ணான கண்ணே சீரியல் தான். சன் டிவியில் ஒளிரப்பாகும் சீரியல்களிலேயே அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான தொடர் கண்ணான கண்ணே தான். அப்பா – மகள் பாசத்தின் உன்னதத்தை உணர்த்தும் இந்த தொடரில் அப்பா கேரக்டரில் பிருத்திவிராஜும்,மீரா எனும் மகளாக நிமிஷிகாவும் அசத்தலாக நடித்து வருகின்றனர்.நிமிஷிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் குண்டூர்.ஆனால் வளர்ந்தது எல்லாம் நம்ம கோயம்புத்தூரில் தான். பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர், கோவையில் உள்ள லோக்கல் சேனலில் காம்பியராக இருந்துள்ளார்.

டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அதன் மூலம் இவருக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீலாம்பரி என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோல் என்றாலும் சிறப்பாக நடித்து வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அந்த தொடர் பாதியில் முடிந்தது. அதன்பிறகு மலையாளத்தில் அனுராகம் என்னும் சீரியலில் நடித்து வந்தார். .நன்றாக சென்றுகொண்டிருந்த அந்த தொடர் கொரோனா காரணமாக கைவிடப்பட்டது. அதன்பிறகுதான் சன்டிவியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்பாவோட லவ்க்காக வெயிட் பன்னிட்டு இருக்கும் கேரக்டர் என்பதால் பர்ஸனாலா டச் ஆகி ஓகே சொன்னாராம். இந்த சீரியலில் மீராவுக்கு ஷார்ட் டைமில் பயங்கர ரீச் .மீரா ஸ்கீரினில் வந்தாலே சீரியலின் டைட்டில் சாங் பிஜிஎம் தான் ரசிகர்களை அவர் பக்கம் அதிகம் திருப்பியுள்ளது. கண்ணான கண்ணே என தொடங்கும் அந்த பாடல் ரசிக்கும் படி இருக்கும். இது தெலுங்கு மொழித் தொடரான ‘பௌர்ணமி’ மற்றும் கன்னட மொழித் தொடரான ‘மானசரே’ போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.

தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மீராவின் அழுத்தமான நடிப்பு இந்த சீரியல் ஹிட் அடிக்க முக்கிய காரணம். மீரா ஃபேஷன் படித்துள்ளதால், அவருடைய காஸ்ட்யூம்ஸை அவரே டிசைன் பண்ணிக்கொள்வாராம். இவர் நடிப்பை தாண்டி மாடலிங் செய்து வருகிறார். டான்ஸ் ஆடுவது இவருக்கு மிகவும் பிடித்தமான ஹாபி. இவருக்கு பிடித்த நடிகர் அஜித் தானாம்.

தொடக்கத்தில் மீரா ஆக்டிங்கை தேர்ந்தெடுத்தபோது அவரது ரிலேஷன்ஸ் வேண்டவே வேண்டாம் என கூறினார்களாம். அந்த சூழல்ல தைரியமும் நம்பிக்கையும் கொடுத்து வழிநடத்தினது அம்மாதான் என நெகிழ்கிறார். .ஆக்ட்டிங் என்னோட passion. சினிமா கனவெல்லாம் இப்போதைக்கு இல்ல. ‘கண்ணான கண்ணே’ல முழுமையா கான்சன்ட் ரேட் பண்ணி நடிக்கனும் என தெளிவாக இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv kannana kanne serial meera actress nimeshikaradhakrishnan biography

Next Story
அர்ச்சனா, ஆன், ஜாரா ஒன்று சேர்ந்தால் அளவில்லா நகைச்சுவை கியாரண்டி!Archana Ann Zara Youtube Channel Wow Life Channel Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com