Advertisment

3 வயதில் சினிமா அறிமுகம்.. 80's புகழ்பெற்ற ஹீரோயின்.. கண்ணான கண்ணே சுலக்‌ஷனா ஷேரிங்ஸ்!

காவியத் தலைவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் நடிகை சுலக்‌ஷனா.

author-image
WebDesk
New Update
sulakshna

80களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கதாநாயகி நடிகை சுலக்‌ஷனா. ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி இவரது சொந்த ஊர். சிறு வயதிலேயே சென்னைக்கு குடியேறிவிட்டார். தனது 3 வயதில் "காவியத் தலைவி" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் ஜெமினி கணேசன் - சௌகார் ஜானகிக்கு மகளாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக பல மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானார்.

Advertisment

1980ல் சுபோதயம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. பிறகு ராஜ்குமார் ஜோடியாக நடித்த கன்னட படமும் ஹிட். அதன்பின்னர் தான் பாக்கியராஜ் இயக்கத்தில் "தூறல் நின்னு போச்சு" என்ற தமிழ் படத்தில் நடித்தார். தொடர்ந்து டார்லிங் டார்லிங் டார்லிங், ஆயிரம் நிலவே வா, கெட்டிமேளம், குவா குவா வாத்துகள், ஜனவரி 1, ராஜாத்தி ரோஜாக்கிளி போன்ற வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடித்த படங்களிலேயே நல்ல ஆர்டிஸ்டாக இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சிந்துபைரவி தான்.

பல படங்களில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும்போது திருமணம் செய்துகொண்டார். 18 வயதில் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் மகனான கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்த இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தவர் தனித்து வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு தான் சினிமா வாய்ப்புகள் நிறைய வந்துள்ளது. தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்றவர். புன்னகை மன்னன் படத்தில் ரேவதிக்கும், மைதிலி என்னை காதலி படத்தில் அமலாவுக்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தார்.



12 வருடங்களுக்கு பிறகு 2003ல் ஜெயாடிவியின் சாஹானா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து அலை ஓசை, கணவருக்காக, மகள், மஹாராணி, முந்தாணை முடிச்சு, தங்கம், அழகி, தெய்வம் தந்த வீடு, லட்சுமி வந்தாச்சு, தேவதையை கண்டேன், அரண்மைக்கிளி, ராசாத்தி என 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே தொடரில் தனலட்சுமி என்ற கௌதமின் அம்மாவாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது குணச்சித்திர நடிகையாக சினிமா, சீரியல்களில் வலம் வருகிறார் சுலக்‌ஷனா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial Kannana Kanne Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment