சன்டிவியில் சீரியல்களில் முன்னணி தொடராக உள்ளது பாண்டவர் இல்லம். இந்த தொடரில் கயல் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பப்ரி கோஷ். கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் கல்லூரி படிக்கும்போது 2009 ஆண்டு கால்பெலா என்ற பெங்காலி திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமானார். . தொடர்ந்து ஒரு சில பெங்காலி மொழி படங்களில் நடித்தார். மூன்று படங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. தொடர்ந்து மும்பை சென்ற அவர் அங்கேயே தங்கி போட்டோஷூட் செய்தார். படவாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு கன்னட மற்றும் தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது. நிறைய விளம்பரங்களில் நடித்தார்.

அதன் பின்னர் இவரை தமிழில் அறிமுகம் செய்தது எஸ் ஏ சந்திரசேகர் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘டூயூரிங் டாக்கீஸ்’ சந்திரசேகர் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ஒய் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போது சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. `நாயகி’ சீரியலில் நெகட்டிவ் ரோலுக்கு ஆடிஷன் வந்தவர் கண்மணி கேரக்டருக்கு ஏற்கெனவே செலக்ட் ஆன நபர் திடீர்னு ரிஜெக்ட் ஆக, அந்த கேரக்டருக்கு செலக்ட் ஆகி நடிக்க தொடங்கினார். என்னதான் பெங்காலி, தமிழ் னு படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது நாயகி சீரியல் கண்மணி கேரக்டர் தான். ஆனந்தியின் தோழியாக நடித்த கண்மணி கேரக்டருக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது.

நாயகியில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பாண்டவர் இல்லம் சீரியலில் நடிக்க வந்த சான்ஸை பயன்படுத்தி இரண்டு சீரியல்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் நாயகி முடிந்துவிட தற்போது பாண்டவர் இல்லத்தின் மருமகள் கயலாக கலக்கி வருகிறார். கண்மணி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு தல-தளபதி என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். `பைரவா’ படத்தில கீர்த்தி சுரேஷ் ஃப்ரெண்டாக, சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாரா ஃப்ரெண்டாக நடித்து புகழ் பெற்றார். ஆரம்பத்தில் தமிழே தெரியாமல் இன்டஸ்டரிக்கு வந்த இவர் youtubeல் கமெண்ட்ஸ் படித்து தமிழ் தெரிந்துகொள்வாராம்.

ஷூட்டிங் ஸ்பார்டில் time pass பப்ரியை தமிழ் பேச சொல்லி அனைவரும் கேட்பதுதானாம். பப்ரிக்கு மாடலிங் செய்வது தான் பொழுது போக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் வரைவது அவருக்கு பிடிக்கும். உணவு என்றால் அசைவம் தான். இவர் தீவிர அஜித் ரசிகை. அதுவும் பெங்காலி உணவு என்றால் ஒரு கை பார்த்து விடுவாராம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பப்ரிக்கு இன்ஸ்டாவில் ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ்.கடந்த 2020ஆண்டு இவர் சந்தீப் என்பரை திருமணம் செய்துகொண்டார். தனது அப்பாவின் ஆசைக்காக ஆக்டிங்கை தேர்ந்தெடுத்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”