Advertisment

கேரிங்கா இருக்கனும், லாயலா நடந்துக்கணும் : சுந்தரி அனுவின் லவ் எக்ஸ்பக்டேஷன்

suntv serial news: ஸ்ரீகோபிகா 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஹாய் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sree gopika nelnath

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தர் சீரியலில் அனுவாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார் ஸ்ரீகோபிகா நீலநாத். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். அப்பா பெங்களூருவிலே பிசினஸ்மேன். அம்மா ரிட்டயர்டு டீச்சர். கேரளாவில் பள்ளி படிப்பை முடித்த பிறகு கோயம்புத்தூர் நேரு இன்ஜினியரிங் காலேஜில் பிபிஏ முடித்துள்ளார். பிறகு இந்துஸ்தான் கல்லூரியில் எம்எபிஏ படித்து வருகிறார். 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஹாய் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு 11 வயதில் Fireman என்ற படத்தில் பத்திரிக்கையாளராக மம்முட்டியுடன் நடித்திருந்தார்.

Advertisment
publive-image

சிறு வயதிலேயே நடிப்பு அதிக ஆர்வம் இருந்ததால் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளார். ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். 2017ல் ‘நான்சென்ஸ்’ மலையாள படத்திலே செகண்ட் லீடாக நடித்தார். இது பிளஸ் 2 ஸ்டூடண்ட் கதை. அதன்பிறகு 2019ல் வெளியான "90ml" படத்தில் ஓவியாவின் தோழிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படம் நிறைய விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதில் நடித்த கேரக்டர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

publive-image

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதன் முதலில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'உயிரே' சீரியலில் என்ட்ரி ஆனார். அந்த தொடரின் மெயின் லீடு மனிஷாஜித் விலகியதால் ஸ்ரீகோபிகா நடித்தார். அவர் நடித்த பவித்ரா கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதன் பிறகு சன்டிவியின் சுந்தரி சீரியலில் அனு கேரக்டரில் நடித்து வருகிறார். ஹீரோ மீது பாசத்தை பொழிந்து ரொம்ப பொசசிவ், கேரிங் ஆக நடிக்கிறார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

publive-image

ஸ்ரீகோபிகா லவ் பண்ணும் நபர் ரொம் லாயலாகவும் கேரிங்காகவும் இருக்க வேண்டுமாம். மியூசிக், டான்ஸ் ஆடுவது, ரொம்ப மொக்கையா ஜோக் பண்ணுவது இவரது பொழுதுபோக்கு. இவர் நடிக்க வேண்டும் என்று அவரது அம்மா மற்றும் தாத்தாவுக்கு தான் ரொம் ஆசையாம். அடிப்படையில் இவர் ஒரு பேட்மின்டன் பிளேயர் மற்றும் பாக்சர். பேட்மின்டன்ல டிஸ்ட்ரிக்ட் லெவல் பிளேயர். நிறைய மெடல்கள் வாங்கியுள்ளார். சினிமாவில் நடிப்பது ரொம்ப ஆசையாம். அதிலும் சண்டை போடுற மாதிரியான ஆக்ஷன் காட்சிகள் என்றால் கொள்ளை பிரியமாம் ஸ்ரீகோபிகாவுக்கு.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Serial Actress Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment