super singer manasi nose ring and Bindi | Indian Express Tamil

மானஸி-க்கு அழகு சேர்க்கும் மூக்குத்தி, சின்ன பொட்டு… இதுக்கு பின்னால இவ்ளோ கதையா?

சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்ற மானஸியின் மூக்குத்தி மற்றும் பொட்டு ரகசியம் பற்றி அவர் கூறியுள்ளார்.

மானஸி-க்கு அழகு சேர்க்கும் மூக்குத்தி, சின்ன பொட்டு… இதுக்கு பின்னால இவ்ளோ கதையா?

சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்ற மானஸியின் மூக்குத்தி மற்றும் பொட்டு ரகசியம் பற்றி அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “ நான் ரொம்ப நான்றாக படிக்க மாட்டேன். சுமாராக படிப்பேன். கலாக்‌ ஷேதிராவில் சேர்ந்தேன். அங்கு 11 மற்றும் 12 வகுப்பில் பைன் ஆட்ர்ஸ் படத்தை தேர்வு செய்தேன். கல்லூரி சேரவில்லை. தொலைதூற கவ்வியில் டிகிரி படிக்கிறேன். எனக்கு வெளியே வாங்கும் உடைகள் பிடிக்காது. அம்மாதான் எனது உடையை தைப்பார். அதில் நிச்சயமாக பாக்கெட் இருக்க வேண்டும். பாக்கெடி இல்லாவிட்டால் எனக்கு மிகவும் சிரமமாக இருக்கும்.  எனக்கு ஷாப்பிங் செல்வது பிடிக்காது. எனக்கு பிடித்தது கிடைக்கும் வரை தேடி கொண்டே இருப்பேன். அப்படி கிடைக்கவில்லை என்றால் வீட்டுக்கு திரும்பு வந்துவிடுவேன்.

பெண் குழந்தைகள் என்றால் மூக்கு குத்த வேண்டும் என்று கூறிய எங்கள் குடும்பத்தினர், நான் 8 வது படிக்கும்போதே குத்திவிட்டார்கள். மிகவும் வலித்தது. மூக்குத்தி குத்த வேண்டும் என்று எனக்கு ஆசையில்லை. இதுபோல எனக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்க பிடிக்காது. அப்பாவுக்கு பொட்டு வைக்கவில்லை என்றால் பிடிக்காது. இதனால் நான் குங்குமத்தை பயன்படுத்தி பொட்டு போல் வைத்துகொள்வேன். ” என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Super singer manasi nose ring and bindi