Advertisment

படு ஸ்டைல்.. கொஞ்சம் கிளாமர்.. ஹூரோயின் ரேஞ்சுக்கு ஆளே மாறிப்போன சூப்பர் சிங்கர் பிரகதி!

நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் வதந்தி பரவியது.

author-image
WebDesk
New Update
super singer pragathi instagram

super singer pragathi instagram

super singer pragathi instagram : சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இதையடுத்து இவர் திரைப்படங்களிலும் பாடத் தொடங்கினார். பரதேசி, வணக்கம் சென்னை, ராட்சன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் தனி இசை ஆல்பங்களிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார். உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

Advertisment

Vijay TV Super Singer Pragathi Guruprasad

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார்.நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

@gopiskirts ????????

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

இயக்குநர் பாலா, சசிகுமாரை வைத்து இயக்கிய ’தாரை தப்பட்டை’ படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பிரகதியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து மேலும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக, பாலா அறிவித்தார். இருப்பினும், இப்படம் பின்னர் கைவிடப்பட்டது

சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது.

பிரகதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளமெர் போட்டோக்களை அவ்வப்போது பதிவு செய்வார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது வீடியோ வெளியிடுவார். மாஸ்டர் உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது.

Friendship day ட்ரெண்டிங் ஸ்டேட்டஸ்.. நீங்க பாத்தீங்களா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment