உங்கள் குழந்தை மந்தமாக இருக்கிறார்களா? இந்த உணவை சாப்பிட வையுங்கள்!!!

மனிதனின் உடலில் இருதயத்திற்குப் பிறகு முக்கியத்துவம் அளிப்பது மூளைக்குத் தான். உடலில் அனைத்துப் பாகங்களில் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே மூளையின் ஆரோக்கியமும் மிக முக்கியம்.

குறிப்பாகக் குழந்தைகள் அனைவரும் மிகவும் சுட்டியாக இருப்பார்கள், அது தான் அவர்களின் குணமும் கூட. ஆனால் சில குழந்தைகள் மட்டும் மந்தமாகவே காணப்படுவார்கள். சில நேரங்களில் அவ்வாறு நடந்துகொள்வதற்கு மூளை மந்தமாக இருப்பதும் ஒரு காரணம். எனவே மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், சில உணவுகளைச் சாப்பாட்டில் சேர்ப்பது அவசியம்.

வளரும் குழந்தைகள் துடிதுடிப்புடன் வளர உதவும் சில உணவுகள்:

கீரை வகைகள்:

பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் சாப்பிடுவதால் அழுத்தம், ஸ்டிரெஸ் என அனைத்தும் குறையும். இதன் மூலம் முக்கிய வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

பட்டர் ஃப்ரூட் / அவகாடோ:

பொதுவாகவே அவகாடோவில் அதிக கொழுப்பு உள்ளது என்று தவறாக புரிந்துக்கொள்வார்கள் ஆனால் இதில் உள்ள மோனோ சாட்சுரேட்டட் கொழுப்பு, இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். இரத்ததில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்போது மூளையின் செயல்பாடும் சீராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்ரூட்:

உடலில் ஓடும் இரத்ததை சுத்தம் செய்ய மிகவும் உதவிகரமாக இருக்கும் காய்கறியில் ஒன்று பீட்ரூட். இரத்தம் சுத்தமாக இருப்பதால் மூளாஇக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் எந்த தடங்கலும் வராது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் மூளைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பீட்ரூட் பாதுகாக்கும்.

பிரக்கோலி:

குழங்தைகளை பிரக்கோலி சாப்பிட வைப்பது மிகப் பெரிய போராட்டம் தான். ஆனால் இதனை வற்புறுத்தி சாப்பிட வைப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். பிரக்கோலியில் வைட்டமின் கே மற்றும் கோலின் நிறைந்துள்ளதால், மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள அரிய உணவு இது.

டார்க் சாக்லெட்:

சாக்லெட் என்றவுடன் குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். டார்க் சாக்லெட் சிறிது கசப்பாக இருக்கும் என்பதால், குழந்தைகளை ஏமாற்றி பழங்கள் மீது சீவி சாப்பிடக் கொடுக்கலாம். இதில் ஃபிலேவனால் என்ற முக்கிய அம்சம் உள்ளதால் மன அழுத்தம் குறைத்து மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைக்க உதவும்.

நட்ஸ்:

பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அரிதான ஒன்று. இந்த நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு ஞாமக மறதி வராமல் பாதுகாக்கும். பொதுவாக முந்திரி என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் முந்திரியை விட அதிக வல்லமை கொண்டது பாதாம் மற்றும் வால்நட். எனவே இதனை பழங்கள் மேலே சிறிய துண்டுகளாக வெட்டி, சாக்லெட் போலவே தூவி சாப்பிடக் கொடுக்கலாம். பழத்துடன் சேர்த்து குழந்தைகள் எளிதாக சாப்பிடுவார்கள். இல்லையென்றால், இந்த நட்ஸ் வகையை அரைத்து தூள் செய்துk கொண்டு, தினமும் பாலுடன் சேர்த்து கொடுக்கலாம்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close