Survivor Contestant Srushti Dange Unknown Facts Tamil news : விரைவில் ஜி தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ எனும் மாபெரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, பல முன்னணி சின்னதிரை மற்றும் வெள்ளித்திரை நடிகை, நடிகர்கள் பங்குபெறவுள்ளனர். இந்த சாகச ரியாலிட்டி ஷோவில் திரைப்பட நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் பங்கேற்க உள்ளார். அவரைப் பற்றி அறிந்திடாத பல விஷயங்களை இங்குப் பார்க்கலாம்.

திரைப்பட வாய்ப்பு
யுத்தம் செய், மேகா, டார்லிங் உட்படப் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ருஷ்டியின் சொந்த ஊர் மும்பை. இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே, தமிழ் திரையுலகிலிருந்து இவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் ஸ்ருஷ்டியின் போர்ட்ஃபோலியோவை பார்த்துவிட்டு, சென்னை அழைத்திருக்கிறார். அப்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிசியாக இருந்தவர், தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஸ்ஹ்ன்னை வந்தடைந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘யுத்தம் செய்’ திரைப்படத்தில் நடிக்கவும் செய்தார்.

ஏற்கெனவே ஸ்ருஷ்டி நாடக கலைஞர் என்பதால், ஏராளமான நாடகங்களில் நடித்த அனுபவம் இவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றது. திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்கிற ஆர்வம் சிறு வயதிலிருந்து இருந்தாலும், தமிழில் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்காத ஸ்ருஷ்டிக்கு, சென்னைதான் மிகவும் பிடித்த இடம்.
மொழி தடை
இவர் நடித்த முதல் படமான யுத்தம் செய் திரைப்படத்தில் எந்த உரையாடல் காட்சிகளும் இல்லை என்பதால் தொடக்கத்தில் எந்தவிதமான பிரச்சனைகளையும் சந்திக்கவில்லை. பிறகு, அதிக வாய்ப்புகள் இவருக்கு வரவே, தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் நீடித்து நிலைக்க வேண்டுமென்றால், நிச்சயம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மிஷ்கினின் அறிவுரையே, தமிழ் மொழி பயில்வதற்கான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மற்றும் கலைஞர்களிடமிருந்து தமிழ் மொழியை நன்கு பேசக் கற்றுக்கொண்டுள்ளார்.

கனவு கதாபாத்திரம்
அனைவர்க்கும் ஓர் முன்னுதாரணமாக இருக்கும் கதாபாத்திரங்கள்தான் இவருடைய தேர்வாக இருக்குமாம். அந்த வரிசையில், பாலிவுட்டின் குயின் மற்றும் ஃபேஷன் ஆகிய திரைப்படங்களில் கங்கனாவின் சவாலான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கவேண்டும் என்பது இவருடைய கனவு. மேலும், பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறார்.

பிடித்தவை
ஸ்ருஷ்டிக்கு ஜோதிகா என்றால் கொள்ளைப்பிரியம். அதேபோல பாலிவுட் ஹீரோ சல்மான் கான் இவருக்கு மிகவும் பிடித்த நடிகர். கவுதம் மேனனின் காதல் கதைகளில் நடித்துவிடவேண்டும் என்பது இவருடைய ஆசை. மேலும், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படங்கள் என்றால் கண்ணிமைக்காமல் பார்ப்பாராம்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
ஸ்ருஷ்டி யோகா வகுப்புக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும், கதைகள் எழுதுவது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். ஷூட்டிங் நேரத்திலும்,சொந்தக் கதைகளை எழுதிக்கொண்டிருப்பாராம். புத்தகங்கள் படிப்பது மற்றும் மியூசிக் கேட்பதும் இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்கள்.

இவருடைய கன்னக்குழிகளில் வீழ்ந்து, இன்றும் எழாமல் இருக்கும் ரசிகர்கள் ஏராளம். சர்வைவர் நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil