ஸ்விம் டிராக்ஸ், சன் க்ளாஸ், மல்டிவிட்டமின்ஸ் – சர்வைவர் நிகழ்ச்சிக்கு முன் விஜி பர்ச்சேஸ்!

Survivor Show Vijayalakshmi Youtube Viral Video Tamil News உள்ளே அவ்வளவு எண்ணிக்கையிலான உடைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்களாம்.

Survivor Show Vijayalakshmi Youtube Viral Video Tamil News
Survivor Show Vijayalakshmi Youtube Viral Video Tamil News

Survivor Show Vijayalakshmi Youtube Viral Video Tamil News : விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ‘சர்வைவர்’ நிகழ்ச்சி விரைவில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க, இந்நிகழ்ச்சி செப்டம்பர் 12-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தனித்தீவில் பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் ஜெயிப்பவரே வெற்றியாளர் என்பதுதான் இந்த கான்செப்ட். இதில் போட்டியாளர்களாக விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, தம்பி ராமையா, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இதில் பங்கேற்க உள்ள விஜயலக்ஷ்மி, இந்நிகழ்ச்சியில் உடுத்திக்கொள்ள என்னவெல்லாம் வாங்கினார் என்பதை காணொளியாக பதிவு செய்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த காணொளி இதுவரை 3 லட்ச வியூஸ்களை பெற்றிருக்கிறது. அப்படி என்னவெல்லாம் பகிர்ந்திருக்கிறார் இந்தக் காணொளியில்?

வழக்கம் போல முதலில் ஸ்கின்கேர் மற்றும் அழகு பொருள்களைத்தான் பேக் செய்தார் விஜி. ஆனால், இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி போல விதவிதமான உடைகளையோ, ஒப்பனைகளோ செய்துகொள்ள முடியாது என்பதால் பாடி லோஷன், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட சரும பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களே அதிகம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் விஜி. முக்கியமாக மல்டிவிட்டமின்ஸ் மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.

மேலும், அங்கு விளையாடுவதற்கு ஏதுவாக ஷார்ட்ஸ், ஜாகர்ஸ், டிராக்ஸ், டேங்க் டாப், டீ-ஷர்ட், ஸ்விம் டிராக்ஸ், ஜாக்கெட், அதிகப்படியான வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் ஹீட் ரெசிஸ்டெண்ட் பேன்ட், ரெயின் கோட் மற்றும் தண்ணீரிலே அதிகப்படியான டாஸ்க் இருக்கும் என்பதால் அதற்கேற்ற ஆக்வா ஷூ என முக்கியமான உடைகளை அடுக்கினார். எனினும், உள்ளே அவ்வளவு எண்ணிக்கையிலான உடைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்களாம்.

அவர் பேக் செய்த அத்தனைப் பொருள்களும் தன்னுடைய கணவர் வாங்கிக்கொடுத்தது என்று காதல் மலரச் சொல்லிக்கொண்டே, 100 நாள்கள் உள்ளேயே இருக்கவேண்டும் என்பதால் பிரத்தியேகமான தன் கணவர் வாங்கிக்கொடுத்த சன் க்ளாஸ் எடுத்துக் காண்பித்தார். மேலும், இந்தப் பொருள்கள் இல்லாமல் போட்டியாளர்கள் அவரவருக்கு மிகவும் பிடித்தமான ஏதாவதொரு பொருளை எடுத்துச் செல்லலாம் என்பதால், தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை எடுத்துச்செல்ல உள்ளதாகத் தெரிவித்தார்.

இறுதியாக, சமீபத்தில் தன்னுடைய மறைந்த தாயின் புகைப்படத்திலிருந்து தன் மீது விழுந்த பூவை காண்பித்து, தன்கூடவே தன்னுடைய அம்மா வருவதுபோல இருப்பதாகவும் தன்னை வாழ்த்துவதைப்போல உணர்வதாகவும்  கூறி கண்கலங்கினார் விஜி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Survivor show vijayalakshmi youtube viral video tamil news

Next Story
ஃபேஷன் டிசைனர்.. சினிமா ஹீரோயின்.. டாப் சீரியல் ஆக்டர்.. இதயத்தை திருடாதே சஹானா பர்சனல் ப்ரொஃபைல்!hima bindhu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com