Advertisment

உங்களுக்கு நிறைய வியர்க்கிறதா?

வியர்வை சுரப்பிகள் உடல் முழுவதும் காணப்பட்டாலும், அவை நெற்றி, அக்குள், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sweat health benefits

, வியர்வை என்பது நமது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் வழியாகும்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது நடைபயிற்சி செய்தாலும் நமக்கு வியர்க்கிறது, இது முற்றிலும் இயல்பானது. வியர்வையின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Advertisment

நமக்கு ஏன் வியர்க்கிறது?

முதன்மையாக, வியர்வை என்பது நமது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் வழியாகும். சுரப்பிகள் உற்பத்தி செய்யும் வியர்வையை குளிர்விக்க, தோலில் இருந்து ஆவியாகிறது. வியர்வை சுரப்பிகள் உடல் முழுவதும் காணப்பட்டாலும், அவை நெற்றி, அக்குள், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகின்றன. வியர்வையில் உப்புகள் இருந்தாலும், அதில் பெரும்பகுதி தண்ணீர் தான். வியர்வையில் உள்ள நீர் ஆவியாகும்போது தோலின் மேற்பரப்பு குளிர்ச்சியடைகிறது என்று பாராஸ் மருத்துவமனையின் தோல் மருத்துவ ஆலோசகர் ஏக்தா நிகம் கூறினார்.

வியர்வையின் நன்மைகள்

உடல் வெப்பநிலையை சீராக்கும்

வியர்வையின் முதன்மை செயல்பாடு உடலை குளிர்விப்பதாகும். மருத்துவ ஏக்தாவின் கூற்றுப்படி, வியர்வை சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வியர்வை’ சருமத்தால் ஆவியாகிறது, இது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. வியர்வை சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவும்.

இரவில் நல்ல தூக்கம்

publive-image

30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, உடல் வியர்வையை உண்டாக்குவது தூக்கமின்மையை போக்க உதவும். தூக்கம் வராமல் இருப்பது அல்லது இரவில் அடிக்கடி எழுந்திருப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடல் வியர்க்க உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

அதிக ஆற்றல்

வியர்வை வருமாறு உடல் செயல்பாடுகள்’ இருக்க வேண்டும். அடிக்கடி உடற்பயிற்சி செய்வது’ ஆற்றல் அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியமான எடையைப் பாதுகாத்தல் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

மூளை செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸ், வழக்கமான ஏரோபிக் செயல்பாடுகளுடன் பெரிதாக வளரும்.

அதிக வியர்வை

publive-image

சிலருக்கு உடலுக்கு குளிர்ச்சி தேவையில்லாத போதும் வியர்க்கும். இந்த நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அல்லது அதிகப்படியான வியர்த்தல் என்று அழைக்கப்படுகிறது. ஏக்தாவின் கூற்றுப்படி, நீங்கள் பின்வரும் சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படலாம்:

உங்கள் தலை, பாதங்கள், உள்ளங்கைகள் அல்லது அக்குள் போன்ற உங்கள் உடலின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் பெரும்பாலும் வியர்க்கும். உங்கள் உடலின் பெரும்பகுதி வறண்டு காணப்படுகிறது, ஆனால் சில இடங்களில் வியர்வை சொட்டுகிறது.

நீங்கள் அசையாவிட்டாலும் அல்லது உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் கூட வியர்க்கிறது. உண்மையில், நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது கூட வியர்க்கிறது. கதவு கைப்பிடியைத் திருப்புவது அல்லது விசைப்பலகையை இயக்குவது போன்ற எளிய பணிகளைச் செய்வது சவாலானதாக இருக்கும் அளவுக்கு நீங்கள் வியர்க்கிறீர்கள்.

நீங்கள் அதிகமாக வியர்த்தால், "நம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டை சமன் செய்யக்கூடிய உப்பு கலந்த எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் அதிகப்படியான திரவ இழப்பை ஈடுசெய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் கூறினார்.

நீங்கள் அதிகமாக வியர்த்தால் மற்றும் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்கள் உதவவில்லை என்றால், உங்கள் மருத்துவர் லோண்டோபோரேசிஸ், போட்யூலினம் டாக்சின், ஆன்டிகோலினெர்ஜிக் மருந்துகள் மற்றும் மிராட்ரை சிஸ்டம் போன்ற ஏதேனும் மருத்துவ நடைமுறைகளில் ஒன்றை பரிந்துரைக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment