Advertisment

டீஷர்ட், லுங்கி உடன் இருக்கும் கவின்.. எதுக்கு இப்படி ஒரு போஸ்ட்.. ஒருவேளை இதுதான் காரணமா?

பல நாட்களுக்கு பிறகு கவின் பகிர்ந்த போட்டோஸ் இப்போது இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதை லைக் செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Kavin

T shirt lungi Kavin new look went viral on internet

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தவர் கவின். சரவணன் மீனாட்சி சீரியலில் அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய புகழையும், ரசிகர்களையும் தேடித்தந்தது. பின்னர் சில நாட்களுக்கு காணாமல் இருந்த கவின், பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டார்.

Advertisment

கவின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரவேண்டுமென ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி நட்புனா என்னனு தெரியுமா (2019) திரைப்படத்தில் கவின் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு நடிகராக பெயர் வாங்கித் தந்தது’ லிஃப்ட் படம் தான். அஸ்கு மாரோ என்ற ஹிட் மியூசிக் வீடியோவிலும் கவின் அசத்தலாக நடனம் ஆடி, ரசிகர்களை கவர்ந்தார்.

கவின் இப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ஊர்க்குருவி படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் கே இயக்குகிறார்.

தொடர்ந்து கவின் ஆகாஷ்வானி படம் மற்றும் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்த படத்துக்கு தாதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கவின் இன்ஸ்டாகிராமில் அரிதாகவே புகைப்படங்களை பகிர்வார்.

இந்நிலையில் கவின் சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று இப்போது வைரலாகியுள்ளது. அதில் ’காண்டு முன்னோக்கி எடுத்துட்டு போகாதீங்க’ என கேப்ஷனிட்டு லுங்கி, டீஷர்ட், கூலிங் கிளாஸ் என கேஷூவல் லுக்கில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

பல நாட்களுக்கு பிறகு கவின் பகிர்ந்த இந்த புகைப்படம் இப்போது இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கவின் போஸ்டை லைக் செய்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, லாஸ்லியா, தர்ஷன் நடிப்பில் கூகுள் குட்டப்பா படம் கடந்த மே.6 அன்று தியேட்டர்களில் ரீலிஸ் ஆனது. ஒருவேளை இதை மனதில் வைத்து தான் கவின் இப்படி ஒரு போஸ்ட் போட்டுருப்போரா என நெட்டிசன்ஸ் சலசலத்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment