விமர்சனத்தைக் கிளப்பியுள்ள தமன்னாவின் டிரெஸ்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தமன்னா அணிந்துவந்த உடை, விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தமன்னா அணிந்துவந்த உடை, விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது.

சென்னை ஃபேர் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமன்னா கலந்து கொண்டார். அப்போது ரெட் சில்க்கால் ஆன சமச்சீரற்ற உடையை அணிந்திருந்தார். அதன்மேல் கோல்டன் கலர் பார்டரால் வடிவமைக்கப்பட்ட ரெட் கலர் மேலாடை அணிந்திருந்தார். இந்த ஆடை ‘கைரி கலெக்‌ஷன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. திஷா, இந்த ஆடையை வடிவமைத்திருந்தார்.

இது பார்ப்பதற்கு புதுமையாகத் தெரிந்தாலும், ஸ்டைலிங் செய்திருந்த விதம் நன்றாக இல்லை நிபுணர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ரெட் கலர் ஆடைக்கு, ரெட் கலர் மேலாடை அணிந்திருந்தது அவ்வளவு பொருத்தமாக இல்லை.

டிசைனர் திஷா இந்த ஆடையின் ஒரிஜினல் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், கோல்டன் கலர் பார்டரால் ஆன ஆலிவ் க்ரீன் கலர் மேலாடை அணிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதில் சின்னச் சின்ன கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.

tisha

அதேசமயம், கழுத்தில் அணிந்திருந்த ஜெய்ப்பூர் கற்கள் பதிக்கப்பட்டுள்ள கோல்டன் சோக்கர் அந்த ஆடைக்குப் பொருத்தமாக இருந்தது எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close