Advertisment

நிறத்தால் புறக்கணிப்பு, விடா முயற்சி... சாதித்து காட்டிய சுந்தரி கேப்ரியல்லா

Lifestyle Update In Tamil : டிக் டாக் வீடியோ மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய கேப்ரியல்லா, கடந்த 2016-ம் ஆண்டு தனது முதல் அரங்கேற்றத்தை தொடங்கினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிறத்தால் புறக்கணிப்பு, விடா முயற்சி... சாதித்து காட்டிய சுந்தரி கேப்ரியல்லா

Sundari Serial Actress Gabriella LIfestyle : பொதுவாக சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்றால் அழகு முக்கியம் என்று பொதுவான கருத்துக்கள் உலா வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சில நடிகைகள் தங்கள் ஆரம்பகாலத்தில் சந்தித்த அழகு மற்றும் நிறம் தொடர்பாக சர்ச்சைகளை கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் சினிமாத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்றால் நிறம் மிக அவசியம் என்ற கருத்துக்கு பலரும் ஆளாகியுள்ளனர்.

Advertisment

ஆனாலும் நிறம் முக்கியமல்ல திறமை இருந்தால் போதும் எதையும் சாதித்து விடலாம் என்ற கருத்தும் பரவலாக சொல்லப்படுவதும் உண்டு. அந்த கருத்தை உண்மையாக்கும் வகையில் பல பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமாகி தற்போது தனக்கென தனி அங்கிகாரத்தை பெற்றுள்ளவர் கேப்ரியல்லா செல்யூஸ்.

டிக் டாக் வீடியோ மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய கேப்ரியல்லா, கடந்த 2016-ம் ஆண்டு தனது முதல் அரங்கேற்றத்தை தொடங்கினார். அந்த வரும் நடைபெற்ற கலக்கப்பபோவது யார் என்ற ஷோவில் பங்கேற்ற இவர், தனது காமெடி திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் அந்நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு முன்பே வெளியேற்றப்பட்டார். அதற்கடுத்து சினிமாவில் வாய்ப்பு தேடிய அவருக்கு சென்ற இடமெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது. இதில் பல இடங்ளில் அவரின் நிறவே அவருக்கு எதிரி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் தொடர் முயற்சி ஒருநாள் வெற்றியை கொடுக்கும் என்பது போல கேப்ரியல்லாவுக்கு படவாய்ப்பு கிடைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஐரா படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாராவின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். நிறம் முக்கியமல்ல திறமைதான் இங்கு பேசும் என்பது போல இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், ஒளிப்பதிவாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகு சினிமாவில் காணாத அவர், திடீரென சுந்தரி சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.  தனது நிறம் குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகும் ஒரு பெண், இந்த எதிர்ப்புகளை மீறி எப்படி சாதிக்கிறார் என்ற கோணத்தில் திரைக்கதை அமைச்சப்பட்டுள்ள இந்த சீரியல் தற்போது பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.  இந்த வாய்ப்பையும் கேப்ரிலாவுக்கு வாங்கி கொடுத்தது அவரின் நிறம் தான். சீரியலில் பிஸியாக நடித்து வரும் கேப்ரியல்லா அவ்வப்போது இன்ஸ்டாவிலும் கலக்கி வருகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gabriella Sellus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment