கொத்தமல்லி, இஞ்சி, ஏலக்காய்… காலையில் இப்படி குடிச்சுப் பாருங்க!

Coriander Coffee Easy Way : உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி காபி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்

நம்மில் பலரும் அன்றாட வாழ்வில் இரு வேலையும் காபி மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் ஒரு சிலர் டீ அல்லது காபியை ஒரு வேளை உணவாகவே அருந்தி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும் அதே அளவு பக்க விளைவுகளும் இருக்கதான் செய்கிறது. மேலும் தற்போது கொரோனா அச்சுறுத்தும் இந்த காலத்தில் நாம் இயற்கை உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த காலம்  நாம் இயற்கை உணவுகளின் அவசியத்தையும் அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது நாம் இந்த பதிவில் கூறப்போகும் இயற்கை பொருட்கள் அடங்கிய காபி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அஜீரணத்தை சீராக்கவும், ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது. மேலும் பக்கவிளைவுகளும் ஏற்படாது.

இதை நாம் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். அந்தக் காலத்தில் நம் முன்னோர்களின் அருமருந்தாக இருந்த கொத்தமல்லி காபிதான் இப்போது நாம் சொல்ல வந்த இயற்கை திரவம். இதை எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்.

வரமல்லி – 2 ஸ்பூன்,

இஞ்சி – 2 சிறிய துண்டுகள்,

ஏலக்காய் – 2,

நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில் இஞ்சி,மல்லி, 2 ஏலக்காய் தனித்தனியாக எடுத்து இடித்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பாலை கொஞ்சம் சூடு படுத்தி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, மல்லி, ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்தவுடன்,  கடைசியாக 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையையும் இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கரைத்து விடவும்.

அடுத்து இந்த தண்ணீர் நன்றாக 5 நிமிடம் கொதித்தவுடன் வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பால் சேர்க்காமல் இந்தத் தண்ணீரை அப்படியே பருகினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். இதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையை சேர்க்க காய்ச்சிய பாலை ஊற்றி கலந்து பரிமாறினால் சூப்பரான மல்லி காபி தயாராகிவிடும்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த காபி  ஜீரண சக்தியை அதிகப்படுத்த, சளி வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health drink coriander coffee easy way to make tamil update

Next Story
பாண்டியன் ஸ்டோர்ஸ் நினைவலையில் சுஜிதா – லட்சக்கணக்கான வியூஸ் பெரும் வைரல் வீடியோ!Pandian Stores Actress Sujitha Dhanush Dhanam Youtube Channel Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com