ஒரு கிளாஸ் நீரில் 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்… என்னென்ன நன்மை இருக்கு தெரியுமா?

Tamil News Update : பெருஞ்சீரகம் விதைகள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது

தற்போதைய காலகத்தில் உணவு பழக்கம் மாறி வருவதால் பெருபாலான மக்கள் உடல் எடை அதிகரித்து சாதாரண நிலையில் செயல்பட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தங்களின் உடல் எடையை குறைக்க பல்வேறு கட்ட முயற்சிகளில் இறங்கி போராடி வருகினறனர். ஆனால் உடல் எடை அதிகரிப்பை தடுக்க அளவான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்பதை அறிந்து பலர் இதனை கடைபிடிக்க மறந்துவிடுகின்றனர்..

நமது உடலில் நடக்கும் ஒவ்வொரு செயல்முறையயும் நம் உண்ணும் உணவுடன் பெரும் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் உணவில் அதிக அக்கரை காட்டுவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி செல்வதற்கு நகர்வதற்கு உதவியாக இருக்கும். இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் முக்கிய பங்கு தண்ணீருக்கு உண்டு. உடலில் தண்ணீரில் அளவு சரியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம்.

அதிலும் சில இயற்கை பொருட்களை சேர்த்த தண்ணீரை பருக்கும்போது உடல் ஆரோக்கியத்தின் உச்சத்தில் இருக்கும். இதில் முக்கியமாக பெருஞ்சீரக தண்ணீர் உடலில் பலவகை நன்மைகளை அளிக்கிறது. இது குறித்து மேக்ரோபயாடிக் பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோராவின் கூறியுள்ளபடி

“பெருஞ்சீரகம் விதைகள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது, உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது, பசியின்மை, எடை குறைப்பு ஆகியவற்றிக்கு பெரிதும்உதவுகிறது. பிஎம்எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீர் குடலை சுத்தம் செய்வதற்கான ஒரு சிகிச்சையாக பெருஞ்சீரகம் உதவுகிறது. மேலும் நீண்டகால மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தலாம்:

வளர்சிதை மாற்றம்தான் நமது செல் ஆற்றலைப் பயன்படுத்தும் விகிதத்தை தீர்மானிக்கிறது. பெருஞ்சீரகம் உட்கொள்ளும்போது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தலாம், குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது விரைவாக வளர்சிதைமாற்றச் செய்கிறது.

பசியை அடக்கலாம்:

பெருஞ்சீரக விதைகள் நார்ச்சத்து நிறைந்த மூலமாகும். பெருஞ்சீரக நீர் காலையில் பசியை கட்டுப்படுத்தி இயற்கையாகவே வயிறு நிரம்பியதாக உணர்கிறது. உடல் முழுதாக உணரும்போது, ​​உங்களுக்கு பசியின்மை குறைவாக இருக்கும்,

உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கலாம்

பெருஞ்சீரகம் ஒரு இயற்கையான நச்சு நீக்கி, அதனால்தான் உங்கள் உணவுக்குப் பிறகு அதை அதனை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், உடல் செரிமானத்தை எளிதாக்குவதற்கும் பெருஞ்சீரக  நீர் ஒரு ஆரோக்கியமான வழியாகும்.

கொழுப்பு குறைக்க உதவும்:

பெருஞ்சீரகம் சாப்பிடுவது உங்கள் உடலில் கொழுப்பு சேமிப்பைக் குறைக்க உதவும். உடலில் உள்ள வைட்டமின் மற்றும் தாது உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் கொழுப்பு சேமிப்பைக் குறைக்கலாம்.

உடல் பருமனை குறைக்கும்

பெருஞ்சீரகம் பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், மாங்கனீசு போனற பல ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பதாக கண்டறியப்பட்டு்ளளது. ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.

பெருஞ்சீரக தண்ணீர் எப்படி செய்வது:

பெருஞ்சீரக தண்ணீரை உருவாக்குவது மிகவும் எளிது. இந்த பானத்தை தயாரிக்க பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டு மட்டுமே தேவை.. 1-2 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை எடுத்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் (100-200 மிலி) நன்கு கலந்து இரவில் உட்கார வைக்கவும், மறுநாள் காலையில், அந்த தண்ணீரை குடிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health fennel water benefits in tamil update

Next Story
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் – ஆரோக்கியமான உறவுக்கு இதை மட்டும் கடைபிடியுங்கள்!Tips to be Happy in Long Distance Relationship Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com