Advertisment

எச்3என்2 காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : ஆன்டிபயாடிக்குகளைத் தவிர்க்க இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்

இந்த நோய்த்தொற்று பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். மூன்று நாட்கள் முடிவில் காய்ச்சல் சரியாகிவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்" என்று மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
எச்3என்2 காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : ஆன்டிபயாடிக்குகளைத் தவிர்க்க இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்

இந்தியாவில் சமீப காலமாக இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, காய்ச்சல், உடல்வலி மற்றும் சில சமயங்களில் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் மார்ச் 3, 2023 அன்று பொது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

Advertisment

“தொற்று பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகு சரியாகிவிடும். ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும், ”என்று மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) தகவலின்படி, எச்3என்2 (H3N2) இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், காய்ச்சல் மற்றும் பிற வைரஸ்கள் காரணமாக, வரும் பாதிப்புகள் பருவகால சளி அல்லது இருமல் இருப்பது பொதுவானது. இதற்காக "மக்கள் அசித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிக்லாவ் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை  எடுக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இது ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்பதால் இது நிறுத்தப்பட வேண்டும், ”என்று மருத்துவ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இன்டர்னல் மெடிசின் இயக்குனர் டாக்டர் சதீஷ் கவுல் கூறுகையில், காய்ச்சல் வைரஸால் ஏற்படுவதால், ஆன்டிபயாடிக் மருந்துகளை தடை செய்ய வேண்டும். "நாம் தேவையில்லாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தினால், அது பல மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது," என்று கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற பாதிப்புகள் இருக்கும்போது பரிசோதனைக்குப் பிறகு ஒரு மருத்துவர் ஒரு ஆண்டிபயாடிக் பரிந்துரைக்கும் வரை, மக்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவர் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும், நல்ல நீரேற்றத்தை பராமரிக்க நிறைய தண்ணீர் ஜூஸ் உள்ளிட்ட திரவ பாணங்களை குடிக்க வேண்டும் மற்றும் காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிட வேண்டும்

இது தடுக்கக்கூடிய நோயாக இருப்பதால், காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும், குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். “மேலும், கொமொர்பிடிட்டிகள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றின் கடுமையான விளைவுகளைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள், ”என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் நோயாளி குணமடையவில்லை என்றால், முழுமையான இரத்த பரிசோதனை (சிபிசி) செய்ய வேண்டும், என்று பராஸ் மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் சஞ்சய் குப்தா கூறினார். நோயாளி மஞ்சள் நிற சளியை வெளியேற்றினால் இது பாக்டீரியாவின் காரணமாகவும் இருக்கலாம், "எனவே, இந்த சோதனை மொத்த லிகோசைட் எண்ணிக்கையை (டிஎல்சி) மதிப்பிட உதவும், மேலும் அது அதிகமாக இருந்தால், அவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment