Advertisment

சூடான நீர், எலுமிச்சை... கொழுப்பைக் குறைக்குமா? உணவியல் நிபுணர் கூறுவது என்ன?

Tamil Lifestyle Update : நண்பர்கள் மற்றும் உறவினர்கள், சூடான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும் என்று பலரும் பரிந்துரைப்பதுண்டு

author-image
WebDesk
New Update
சூடான நீர், எலுமிச்சை... கொழுப்பைக் குறைக்குமா? உணவியல் நிபுணர் கூறுவது என்ன?

Tamil Lifestyle Update : மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களின் காரணமாக பலரும் துரித உணவுகளை எடுத்தக்கொண்டு உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளனர். ஒரு கடத்தில் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து பலவித நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகின்னறனர். அந்த நேரத்தில் உடல் எடை குறைப்பதற்கும் கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்துவதற்கும் பலவகையான வழிகளை கையாண்டு வருகின்றனர்.   

Advertisment

இதில் ஒரு சிலர் உடல் கொழுப்புக்களை குறைக்க வழி தெரியாமல் மற்றவர்களின் உதவியை நாடி வருகின்றனர். அப்படி வரும் சிலரிடம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள், சூடான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும் என்று பலரும் பரிந்துரைப்பதுண்டு. இந்த முறை உண்மையில் வேலை செய்கிறதா? இந்த முறையில் சூடான நீரை பருகும்போது நாம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால் எலுமிச்சையில், வைட்டமின் சி மற்றும் செரிமானத்திற்கு தேவையான அமிலங்கள் இருப்பதால் ஒரு சிறந்த செரிமான ஆதாரமாக பயன்படுகிறது. ஆனாலும் ஒரு குவளை சூடான நீர் அனைத்து கொழுப்புகளையும் கரைக்கப் போகிறது என்று கருதுவது, குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கினிதா கடகியா படேல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

"கொழுப்பை குறைப்பதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் கொழுப்பு குறையும் என்பது ஒரு கட்டுக்கதை என்று தனது இன்ஸடாகிராம் பதிவுக்கு தலைப்பிட்டுள்ளார். ஹெல்த்லைன் படி, உடல் எடையை குறைக்கும் போது எலுமிச்சை நீர் வழக்கமான தண்ணீரை விட சிறந்தது அல்ல. ஆனாலும் அதிக கலோரி பானத்திற்கு பதிலாக குறைந்த கலோரி கொண்ட பானமாக பயன்படுத்தலாம். இது எடை குறைப்பை  ஊக்குவிக்கும்.

எலுமிச்சை நீரின் மற்ற ஆரோக்கிய நன்மைகளைப் பொறுத்தவரை, இது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், சருமத்திற்கு ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி தோல் சுருக்கம், வறண்ட சருமம் முதுமை மற்றும் சூரியனால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. உடலில் பலவகை நன்மைகளுக்கு எலுமிச்சை முக்கிய பங்காற்றும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Tamil Lifestyle Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment