Advertisment

முடி உதிர்வுக்கும் மலச் சிக்கலுக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் விளக்கம்

வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hair care tips in tamil

Hair Loss: Causes, Symptoms and Treatment

புகைப்பிடித்தலுகூட முடி உதிர, முடி வளர்ச்சி பாதிக்கப்பட ஒரு காரணம். ஆண்களில் பலருக்கு வழுக்கை (alopecia) ஏற்பட இந்தப் புகைப்பழக்கம் ஒரு காரணமாக இருக்கிறது. பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படலாம். 

Advertisment

பூஞ்சைத் தொற்று (Fungal infection), வட்ட வடிவில் ஏற்படும் புழுவெட்டு (Ring infection) போன்றவை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும். இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், பாய், தலையணை, சீப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சைத் தொற்று, புழுவெட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினால் நம்மையும் அது பாதிக்கலாம். 

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகக்கூட முடிஉதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிகரித்துவிட்ட வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரிய ஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.

இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. ஹெல்மெட்டில் வியர்வை தேங்குவதால் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து அது தலைமுடியைப் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக முடி கொட்டுகிறது. இதைத் தவிர்க்க ஹெல்மெட்டில் ஆன்டி பாக்டீரியல் சொல்யூஷன் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தினால் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிபுணர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480 .

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment