Advertisment

ஒமைக்ரான் தொற்று புதிய அறிகுறிகள் : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

Tamil Health Update : நீங்கள் சரியான முறையில் முககவசம் அணிவது, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொள்வது அவசியம்

author-image
WebDesk
New Update
ஒமைக்ரான் தொற்று புதிய அறிகுறிகள் : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

Omicron symptoms New Update : தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா வகை தொற்றை விட வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக உலகளவில் பல நாடுகளி்ல் பல்வேறு கட்டு்பபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், வேகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒமைக்ரான் தொற்றால் தாக்கப்பட்டவர்களுக்கு குமட்டல் மற்றும் பசியின்மை என்ற இரண்டு அறிகுறிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இசட்ஒஇ கோவிட் (ZOE Covid ) என்ற ஆய்வு செயலிமூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியரான டிம் ஸ்பெக்டரின் தலைமையில நடைபெற்ற இநத ஆய்வில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவகள் பலருக்கு குமட்டல், பசியின்மை, லேசான வெப்பநிலை, தொண்டை புண் மற்றும் தலைவலி" உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்று பேராசிரியரான டிம் ஸ்பெக்டர் யூடியூப் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இசட்ஒஇ கோவிட் ஆப் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது யுகேயில், மற்ற பகுதிகளை விட லண்டனில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக உள்ளது, டெல்டா வைரஸ் ஆதிக்கம் செலுத்திய அக்டோபர் தொடக்கத்தில் உள்ள தரவுகளுடன் ஒப்பிடும்போது 50 சதவிகித நோயாளிகள் மட்டுமே காய்ச்சல், இருமல், வாசனை அல்லது சுவை உணர்வு இழப்பு ஆகிய மூன்று அறிகுறிகளை அனுபவித்திருக்கிறார்கள் என்று அவர்கள் கண்டறிந்தனர்.

டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளின் அறிகுறிகளல் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்த கண்டுபிடிப்புகள், ஒமைக்ரான் பாதிப்பு சந்தேகம் மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகளை உள்ளடக்கிய மிகச் சிறிய அளவிலான தரவுகளிலிருந்து வந்தவை. இதை உறுதிப்படுத்த பெரிய தரவுகளைப் பார்க்க வேண்டும்,” என்று ஹைதராபாத்தில் உள்ள யசோதா ஹாஸ்பிடல்ஸ் நுரையீரல் ஆலோசகர் டாக்டர் சேத்தன் ராவ் வட்டேபல்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் ஆலோசகர் நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி கிருஷ்ண யெட்லபதி இந்தியன் எக்பிரஸிடம் கூறுகையில்,  "ஓமிக்ரான் தொடர்பான நோய்த்தொற்றுகள் மிகவும் லேசானவை, இந்த தொற்றினால் பாதிக்கப்படும்போது  தொண்டை பிரச்சினைகள், பசியின்மை போன்ற பொதுவான பலவீனம் இருக்கும். தேசிய மற்றும் சர்வதேச தரவுகளின்படி, இருமல், சளி, மூச்சுத் திணறல், வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற வழக்கமான அறிகுறிகள் பெரும்பாலான நிகழ்வுகளில் காணப்படுவதில்லை, ”என்று கூறியுள்ளார்.

இதனை ஒப்புக்கொண்ட மசினா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் ஆலோசகர் டாக்டர் சங்கேத் ஜெயின் ஐந்து நாட்களுக்கு முன்பு நோயாளிகளில் ஒருவர், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தியின் குறைபாட்டுடன் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் ஒமைக்ரான் சோதனை நடத்தினோம்.  அது நேர்மறையாக வந்தது. இத்தகைய அறிகுறிகள் பொதுவாக தற்காலத்தில் குறிப்பாக ஓமிக்ரான் நோய்த்தொற்றுகளில் காணப்படுகின்றன.

உங்களுக்கு குமட்டல் மற்றும் பசியின்மை இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டுமா?

இந்த ஆய்வின்படி பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 40 முதல் 70 சதவீதம் வரை குறைவு. ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை பாதிப்பு நம்மில் பலருக்கு சளி பிடித்தது போல் உணரலாம், அது 50 இல் ஒருவருக்கு மட்டுமே  அவர்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் விதமான நீண்ட கால அறிகுறிகளுடன் விட்டுச்செல்லும்" என்று ஆய்வு பயன்பாடு எச்சரிக்கிறது.

ஒமைக்ரான் தொற்றில் இருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்?

டில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், வெளியூர் பயணம் செய்யாதவர்கள் ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது "அது படிப்படியாக சமூகத்தில் பரவுகிறது" என்று குறிப்பிட்டார். இசட்ஒஇ  பயன்பாட்டின்படி, இது முக்கியமானது

ஓமிக்ரானின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிந்து, பரிசோதனை செய்து, அவற்றை அனுபவிக்கும் போது தனிமைப்படுத்தவும்"

அதிக தொற்றுநோயை அனுபவிக்கும் பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், வீட்டிலேயே தங்கி சமூக தொடர்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

முழு தடுப்பூசி போடுங்கள்

நெரிசலான இடங்களில் முககவசம் அணியுங்கள்

உங்கள் உணவில் சிறிய மாற்றங்களுடன் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்

நீங்கள் சரியான முறையில் முககவசம் அணிவது, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொள்வது (இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்றால்), சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் நல்ல காற்றோட்டத்தை பராமரிப்பது அவசியமாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment