Advertisment

பி.பி குறையும்; தொப்பை மறையும்... பிஸ்தாவில் இவ்ளோ இருக்கு!

Health Benefits : சிறு தொற்று நோய்கள் முதல் உயிரிரை பறிக்கும் கொடிய நோய்கள் வரை அனைத்திற்கும் எதிராக போராடும் வலிமைகொடுக்கும் பருப்புவகைகளை தினசரி உணவில் சேர்த்துக்ககொள்வது அவசியம்.

author-image
WebDesk
New Update
பி.பி குறையும்; தொப்பை மறையும்... பிஸ்தாவில் இவ்ளோ இருக்கு!

Tamil Health Pista Benefits Update : மனிதனுக்கு ஏற்படும் பல நோய்களை கட்டப்படுத்துவதில் பருப்பு வகைகள் அதிகம் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சிறு தொற்று நோய்கள் முதல் உயிரிரை பறிக்கும் கொடிய நோய்கள் வரை அனைத்திற்கும் எதிராக போராடும் வலிமைகொடுக்கும் பருப்புவகைகளை தினசரி உணவில் சேர்த்துக்ககொள்வது அவசியம். பருப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள்,  பல ஆய்வுகள், தேவையற்ற பசியின்மைக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது,

Advertisment

ஆனால் பருப்பு வகைகளக் உடல் எடையை குறைப்பது உட்பட பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் பிஸ்தா பருப்புக்கு தனி இடம் உண்டு. இது வழக்கமாக உட்கொள்ளும் போது எடை குறைப்புக்கு உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சான் டியாகோ, 100 ஆரோக்கியமான, அதிக எடை மற்றும் பருமனான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வழக்கமான பிஸ்தா சாப்பிடுவது எடை குறைப்பை ஊக்குவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும், பொதுவான உணவு, உடல் எடை குறைப்பு ஆலோசனை மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைப் பெற்றனர். இதில் பாதி பேர் தங்கள் தினசரி உணவில் 1.5 அவுன்ஸ் பிஸ்தாக்களை உள்ளடக்கியிருந்தாலும், மற்ற பாதி பேர் பிஸ்தாவை எடுத்துக்கொள்ளவில்லை. நான்கு மாத ஆய்வின் முடிந்து ஜூலை 2020 நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், ஒருவரது உணவில் அமெரிக்க பிஸ்தாவைச் சேர்ப்பது எடையைக் குறைக்க உதவும், கலோரி-கட்டுப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டால், இரத்த அழுத்தத்தைக் குறைப்பது போன்ற கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கலாம் என்று கூறப்பட்டது.

முதன்மை ஆய்வாளரான செரில் ராக், பிஎச்டி, ஆர்டி (PhD, RD) கருத்துப்படி, "அமெரிக்க பிஸ்தா எடை குறைக்கும் உணவின் ஒரு அங்கமாக இருக்கலாம், முக்கிய ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதை அதிகரிக்கலாம் மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை மேம்படுத்தலாம் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்து்ளளது.

இரு குழுக்களும் தங்கள் உடல் எடையில் ஐந்து சதவீதத்தை இழந்தனர் மேலும் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற நோய்களுக்கு ஒருவருக்கு ஆபத்து உள்ளதா இல்லையா என்பதற்கான குறிகாட்டிகள். மேலும் குறைந்த சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம், அதிகரித்த ஃபைபர் உட்கொள்ளல் மற்றும் கட்டுப்பாட்டு குழுவை விட இனிப்புகளின் குறைந்த நுகர்வு உட்பட பிஸ்தா குழுவிற்கு கூடுதல் நன்மைகள் நன்மைகளை கொடுத்துள்ளது. பிஸ்தா குழுவில் லுடீன், ஆல்பா- மற்றும் பீட்டா-கரோட்டின் ஆகியவற்றின் ஆக்ஸிஜனேற்ற கரோட்டினாய்டுகளின் உயர் இரத்த அளவுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களுக்கு பாலி- மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் ஆரோக்கியமான விகிதமும் இருந்தது.

மேலும் நீல ஒளி மற்றும் புற ஊதா ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்ட பைட்டோநியூட்ரியண்ட்களான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, இவை நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.  பிஸ்தாக்களில் ஒரு தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஒரு முழுமையான புரதமாக இருப்பதால், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ஆரோக்கியத்தைத் தக்கவைக்கத் தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன என்பதை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தால் பிஸ்தாவின் புரதத் தரத்தை ஆய்வு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment