Advertisment

அரிசி சாதத்தை அறவே நிறுத்தினால் ஆபத்து… இந்த 10 பாயிண்டை கவனிங்க!

Top reasons to not to avoid eating rice Tamil News: அரிசி சாதம் நமது முன்னோர்களால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் நமது உணவு பாரம்பரியத்தைச் சேர்ந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Health tips: benefits of eating white rice everyday tamil

Health benefits rice in tamil: தென்னிந்தியாவில் பரவலாக பயிரிடப்படும் பயிர் வகைகளில் 'நெல்' முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆதாலால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கியமான உணவாக அரிசி சாதம் உள்ளது. தற்போது வளர்ந்து வரும் உணவு கலாச்சாரத்தில் சாதம் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பும் மக்கள் சாதம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

Advertisment

அப்படி எடை இழப்புக்காக அரிசி சாதத்தை நீங்கள் முழுமையாக விட்டுவிட தேவையில்லை என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுகிறார். தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர், "அரிசி சாதம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார். மேலும். நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் அரிசி சாதத்தின் 10 நற்பண்புகளை இங்கு பட்டியலிட்டுள்ளார்.

publive-image

அரிசி சாதத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

  1. அரிசி சாதம் ஒரு முன்-பயோடிக் ஆகும். அது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளின் மாறுபட்ட சுற்றுச்சூழலுக்கும் உணவளிக்கிறது.
  2. கையால் அரைக்கப்பட்ட, ஒற்றை பளபளப்பான அரிசியை கஞ்சி முதல் கீர் வரை பல வழிகளில் சமைத்து ருசிக்கலாம்.
  3. அரிசி சாதம் சாப்பிடும்போது உங்கள் இரத்த சர்க்கரை சீராக இருக்கும்.
  4. அரிசி சாதம் எளிதில் ஜீரணமாகக் கூடியது. மறுசீரமைப்பு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது சிறந்த ஹார்மோன் சமநிலைக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக வயதான மற்றும் மிகவும் இளம் வயதில் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது.
  5. சருமத்திற்கு சிறந்தது, அதிக புரோலாக்டின் அளவுகளுடன் வரும் விரிவாக்கப்பட்ட துளைகளை நீக்குகிறது.
  6. தைராய்டு பாதிப்பு ஏற்படக்கூடிய முடி வளர்ச்சியைத் தக்கவைத்து மேம்படுத்துகிறது.
  7. நெல் பயிரிடம் சமூகங்கள் அதிக ஒத்துழைப்பு மற்றும் பாலின சமமாக இருக்க உதவுகிறது.
  8. அரிசியின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தக்கூடியது. இதன் தவிடு கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது.
  9. பருப்பு வகைகள் வளர மண்ணில் போதுமான ஈரப்பதத்திற்குப் பின் இலைகள் இயற்கையான நைட்ரஜன் பொருத்துதல்களாக வேலை செய்வதன் மூலம் மண்ணை மேலும் வளமாக்கும்.
  10. அரிசி சாதம் நமது முன்னோர்களால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் நமது உணவு பாரம்பரியத்தைச் சேர்ந்தது.
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Tamil Health Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment