Tamil health tips: நமது உடலில் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தால், அவை நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இந்தியாவில் தற்போது மீண்டும் தொற்றுநோய் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுக்கான தேடல் நம்மிடையே அதிகரித்துள்ளது.
இவற்றில் பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களாக உள்ளன. அந்த வகையில் முக்கனிகளுள் ஒன்றான பலா முக்கிய இடத்தை பிடிக்கிறது. குறிப்பாக, இதன் விதைகள் ஏகப்பட்ட ஆரோக்கியமான பலன்களை உள்ளடக்கியுள்ளது.

இவற்றின் மருத்துவ நன்மைகள் குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பலாப்பழ விதைகள் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்ததாக இருப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு பலாப்பழ விதைகள்
“பலாப்பழ விதைகளை கூட்டு அல்லது கறியாக சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம். அவற்றை வேகவைத்து அல்லது சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து வறுத்து சுவையான சிற்றுண்டியாக செய்யலாம். இவற்றில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உணவில் பன்முகத்தன்மையையும், உங்கள் திசுக்களுக்கு வலிமையையும், மற்றபடி சலிப்பான வாழ்க்கைக்கு சுவையையும் சேர்க்கின்றன.

உடல் இயற்கையான நோயெதிர்ப்பு மறுமொழியுடன் இருக்கிறது. இது பெரும்பாலும் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது அனைத்து வகையான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது நம் உடல் வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு எதிரான பாதுகாப்பின் முதல் வரிசையாக செயல்படுகிறது.
நாம் வழிநடத்தும் வாழ்க்கை முறையின் அடிப்படையில் இந்த பதில் வலுவானதாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கலாம். பலவகையான உணவுகளை உண்பதும், ஒழுக்கமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதும் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியின் மூலக்கல்லாகும்.

கடந்த 2 தசாப்தங்களாக, நமது உணவுகளின் பன்முகத்தன்மையில் மெதுவான ஆனால் நிலையான இழப்பு ஏற்பட்டுள்ளது. பருவகால உணவுகள் மற்றும் சமையல் நடைமுறைகள் கவர்ச்சியான உணவுகள் மற்றும் பேக்கிங் வீடியோக்களால் இழக்கப்படுகின்றன.
இது பல வழிகளில் நமக்கு செலவை ஏற்படுத்தியுள்ளது. நோயெதிர்ப்பு செயல்பாட்டில் சமரசம் அவற்றில் ஒன்று” என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா தனது பதிவில் விளக்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“