Advertisment

பனங் கற்கண்டு, பசு நெய், வேர்க்கடலை... இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

Tamil News Update : பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இனிப்புசுவை நிறைந்த பனங்கற்கண்டு இயற்கை மருத்துவத்தில் பயன்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பனங் கற்கண்டு, பசு நெய், வேர்க்கடலை... இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

Tamil Health Update : இந்தியாவில் பயன்படுத்தப்படும் இயற்கை மருத்துவ பொருட்களில் பனங்கற்கண்டுக்கு தனி இடம் உண்டு. பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இனிப்புசுவை நிறைந்த பனங்கற்கண்டு இயற்கை மருத்துவத்தில் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் விட்டமின்கள் தாதுக்கள் அமினோ அமிலங்கள் என பல சத்துகள் அடங்கியுள்ளது.  

Advertisment

ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இருமல், சளி, ரத்த அழுத்தும், மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். பழங்காலத்தில் பருவகால தொற்று நோயான சளி இருமல் ஆகிய தொற்றுகளுக்கு பனங்கற்கண்டு மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டது. பனங்கற்கண்டை சிறிதளவு வாயில் போட்டி அதன் உமிழ் நீரை விழுங்கினால், சளி இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கலாம்.

சீரகத்துடன் பனங்கற்கண்ட்டை சேர்த்து மென்று திண்றால் வாய் துர்நாற்றம் போகும். நெய்யுடன் பனங்கற்கண்டு மற்றும் வேர்கடலையை சேர்த்து சாப்பிடும் போது உடல் சுறுசுறுப்பாக இயங்கும். இரவில் படுப்பதற்கு முன்பு சிறிதளவு பனங்கற்கண்டுடன், பாதாம் பருப்பு மற்றும் சீரகத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடும் போது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெங்காய சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். தலா அரை தேக்கரண்டி மிளகுதூள் நெய், பனஙகற்கண்டு இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வரும்போது குரல் தொடர்பான பிரச்சனை தொண்டை கட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment