Tamil Health Food For Diabetes Patients : இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அதிக மக்களை தாக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உடல் ஆற்றலுடன் இருக்க வேண்டும் என்றால் ரத்தத்தில் சர்க்கரை முக்கியமானதுதான் என்றாலும் கூட அளவு குறையாமலும் ஒரு வெலலுக்கு மேல் அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
தற்போதுவரை இந்தியாவில், 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்கப்படாவிட்டால், சர்க்கரை அளவு அதிகரித்து இதயத்தில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இந்த நிலை வராமல் தடுக்க இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது இன்றியமையாத ஒன்று.
சில சத்தான உணவுகள் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.வேண்டிய உணவு ஹேக்குகளை பரிந்துரைக்கிறார்:
மாங்க் பழம்
மற்ற இனிப்புகளுக்கு பதிலாக மாங்க் பழத்தில் பூஜ்ஜிய கலோரிகள் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. இயற்கையாகவே சர்க்கரையை விட மிகவும் இனிமையானது, எனவே இதை சாப்பிடும்போது இந்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்ஃ
ஆளிவிதை ரொட்டி
சர்க்கரை நோய் கட்டுக்குள் வைப்பதில் விதைகளுக்கு முக்கிய பங்குண்டு. கொட்டைகள் மற்றும் விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன, மேலும் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது
உறைந்த பெர்ரி
சர்க்கரை நோயாளிகளுக்கு பெர்ரி சிறந்தது, அவை இனிப்பு சுவையானது மற்றும் கிளைசெமிக் குறியீட்டில் மிகக் குறைவு. இதில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. மிட்டாய்களாக இவற்றை சாப்பிடலாம். நீங்கள் மூல ஆர்கானிக் கொக்கோ, பாதாம் பால் மற்றும் மாங்க் ஸ்வீட்னர் ஆகியவற்றைக் கொண்டு டிப்பிங் சாஸ் தயாரித்து, அதில் உறைந்த பெர்ரிகளை நனைத்து, இனிப்பு சுவையுடன் சாப்பிட்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
புதிய மெலிந்த இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட அல்லது சிவப்பு இறைச்சிக்கு பதிலாக புதிய மீன் மற்றும் மெலிதான இறைச்சிகளை சாப்பிடுவது சிறந்தது, ஏனெனில் அவற்றில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன, மேலும் இதய நோய்கள் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
இனிக்காத சுவையுள்ள தேநீர்
பழச்சாற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே பழச்சாறுகளை குடிப்பதற்கு பதிலாக, நீங்கள் இனிக்காத தேநீர் குடிக்கலாம். மற்றும் தேங்காய் தண்ணீர் அல்லது எலுமிச்சை நீர் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
ஆலிவ் எண்ணெய் / தேங்காய் எண்ணெய் –
இது இதயத்திற்கு உகந்த எண்ணெய்கள், அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோயை மேம்படுத்த உதவும்.
பாதாம் பால்
பாதாம் பால் இனிக்காதது மற்றும் பாலை விட கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை இரண்டிலும் குறைவாக உள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது இதயத்திற்கு நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil