Advertisment

காதல்... காமம்... மன நோய்?

Tamil Health Update : காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி  கூட வரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காதல்... காமம்... மன நோய்?

Tamil Health Update For Sexual Feeling : அந்த உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும் காதல் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான  பாதிப்புகள்  ஏற்படும் என்கின்றனர்  மனநல மருத்துவர்கள். 

Advertisment

மனிதனோ, விலங்கோ  காதல்  உணர்வு இன்றி இருக்க முடியாது. காதல்  உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.  காதல்  உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், ஒருவருடன் அதிக நெருக்கமான பயணங்கள், கொலை, கொள்ளை போன்றவை  நடக்கின்றன.

காதல்  உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக் கிளம்புமாம். எனவே காதல்  உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான  பாதிப்புகள்  ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காதல், காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள்.

ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.அதேசமயம் காதல் உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி  கூட வரலாம் என்று கணடறியப்பட்டுள்ளது.  திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள். 

முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு காம  உணர்வுகளை கட்டுப்படுத்தும்  ஆற்றல் உண்டு என்றும் கூறப்படுகிறது. காதல்  உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு திளைப்பவர்களுக்குத்தான்  காதல் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment