scorecardresearch

ஆண்களின் உயிரணு உற்பத்தி… இந்த 3 உணவுகள் முக்கியம்!

கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கம், மது பழக்கத்திற்கு அடிமையாவது உள்ளிட்ட சில வாழ்க்கை முறை பழக்கமே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆண்களின் உயிரணு உற்பத்தி… இந்த 3 உணவுகள் முக்கியம்!
sexual health diet

உலகம் முழுவதும் இளைஞர்கள் பலரும் தற்போது சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று ஆண் மலட்டுத்தன்மை. இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் இளைஞர்களின் அதிகரிப்பு சமீபகாலமாக குறைந்து வந்தாலும், விந்தணு உற்பத்தி அதன் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கம், மது பழக்கத்திற்கு அடிமையாவது உள்ளிட்ட சில வாழ்க்கை முறை பழக்கமே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட பலரும் ஆங்கில மருத்துவத்தை நாடி செல்கின்றனர். இப்படி செல்பவர்கள் பிரச்சினையில் இருந்து விடுபடுகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால் சில இயற்கை பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபட நல்ல தீர்வாக அமையும். அந்த வகையில் ஆண் மலட்டுத்தன்மையை போக்கவும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் சிறந்த உணவுகளை இந்த பட்டியலில் பார்க்கலாம்.

வைட்டமின் டி

உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். இதில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்திக்கும் ஆண்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. அவகேடோ, சாலமன் மீன் காட் லிவர் ஆயில், முட்டை, உலர் திராட்சை, வாழைப்பழம், மாதுளை, ப்ளூ பெர்ரி, வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க உதவும்.

அஸ்வகந்தா

இயற்கை மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற பொருளான அஸ்வகந்தா விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆண்களின் வந்தனுக்கள் மூலமாக பெண்கள் கருவுறும் அளவும், பாலியல் ரீதியான செயல்பாட்டை அதிகரிக்கவும் அஸ்வகந்தா முக்கிய பொருளாக பயன்படுகிறது.

ஜிங்க் (துத்தநாகம்)

ஆண்களின் விந்தணு உற்பத்தி மற்றும் விரைப்பைகளின் வளர்ச்சியை அதிகரிக்க ஜிங்க் முக்கிய பொருளாக பயன்படுகிறது. உடலுக்கு தேவையாக ஜிங்க் சத்து கிடைக்காதபோது விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக பாதிக்கப்படுவது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஜிங்க் உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்பொது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் புரோஸ்டேட் சுரப்பி மற்றும் பாலியல் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஹார்மோன்களின் அளவை சமன் செய்து விந்தணு பாதிப்பை சரி செய்ய உதவுகிறது சிவப்பு இறைச்சி, பார்லி, பீன்ஸ், உள்ளிட்ட உணவு பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.

சோயா

பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கக்கூடிய ஐசோஃபீன்வோன்ஸ்  என்ற பாலிபீனால் அதிகமாக காணப்படும் சோயா ஆண்களுக்கு கருவுறுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் சோயாவை அதிகம் எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு செறிவு, இயக்கம் உருவம், மற்றும் விந்துவை கருப்பைக்குள் செலுத்தும் அளவுக்கு திறன் ஆகியவை சராரியாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் போதை பொருள் பயன்படுத்துவது புகைப்பிடிப்பது உள்ளிட்ட பழங்கங்களில் இருந்து விடுபடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது பாலியல் ரீதியாக பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவதாக அமையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil lifestyle top three food update for human sexual health