சித்திரை திருநாள் ஸ்பெஷல் : இன்றைக்கு உங்கள் வீட்டில் இதை எல்லாம் சமைத்தார்களா?

ரசித்து ருசித்து மகிழும் வகையில் தலைவாழை விருந்து ரெசிப்பிகளை பார்க்கலாமா

சித்திரை என்றாலே சிறப்பு… அதிலும் தமிழர்களுக்கு சித்திரை திருநாள் தான் தமிழ் புத்தாண்டு. சித்திரை மாதத்தில் மரங்கள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாகப் பூத்துக் குலுங்கும். தமிழகத்தில் புத்தாண்டு பிறக்கிற நேரத்தில் கேரளத்திலும் விஷு புத்தாண்டு கொண்டாட்டமும் நடக்கும்.

இந்த நல்ல நாளில்,  குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து  தலைவாழையில் விருந்து சாப்பிடுவார்கள். அதிலையும் வீட்டில் இருக்கும் குட்டீஸ்கள்  வடை, பாயாசம், பஜ்ஜியை ருசி பார்க்க ஆவலாக காத்திருப்பார்கள். த்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ பச்சடிக்கு தனி இடம் உண்டு.

அதே போல் பெரும்பாலானவர்கள் வீடுகளில் பருப்பு வடையும், பருப்பு பாயசமும் செய்வது வழக்கம்.
ஆனால் வழக்கமான இந்த உணவுகளை தவிர சில சிறப்பு ரெசிப்பிகளுக்கும்  இந்த நன்னாளில் செய்வது  அதிகால வழக்கம். ரசித்து ருசித்து மகிழும் வகையில் தலைவாழை விருந்து ரெசிப்பிகளை பார்க்கலாமா…
முக்கனி பாயாசம்:

தேவையான பொருட்கள்: 

1. மாம்பழம் துண்டுகள்
2. வாழைப்பழம்
3.தேங்காய்த்துருவல்
4. வெல்லம்
5. ஏலக்காய்
6.முந்திரி
7. திராட்சை
8.நெய்
9. பலப்பழம்

செய்முறை: 

1.முக்கனிகளையும் மிக்ஸ்யில் மைய அரைத்துக் கொள்ளவும்.

2.வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சை மற்றும் பழங்களையும் போட்டு தனித்தனியாக பிரட்டி எடுக்கவும்.

3. பின்பு, வாணலியில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

4. தேங்காய்த்துருவலுடன் ஏலக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்து கெட்டியான பால் எடுக்கவும்.

5. இப்போது அடுப்பில் கடாயை வைத்து, நெய் சேர்த்து, அரைத்த பழ விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

6. அதனுடன், வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும்.

7. பின்பு, முந்திரி, திராட்சை மற்றும் தனியாக எடுத்து வைத்த பழங்கள் சேர்க்கவும். இந்தக் கலவை நன்கு வெந்தது பரிமாறவும்.

தட்டப்பருப்பு போண்டா


தேவையான பொருட்கள்:

1.தட்டப்பருப்பு
2.வெங்காயம்
3.பச்சை மிளகாய் –
4.இஞ்சி
5.தேங்காய்த்துருவல்
6.கறிவேப்பிலை- கொத்தமல்லி

செய்முறை:

1. முதலில், இரண்டு மணி நேரம் ஊறவைத்த தட்டப்பருப்பை மிக்ஸ்யில் போண்டா பதத்திற்கு அரைத்துக் கொள்ல வேண்டும்.

2. பின்பு, அதில், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, தேங்காய்த்துருவல் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளம் வேண்டும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மொரு மொரு தட்டப்பருப்பு போண்டா தயார்.

 

வேப்பம்பூ பச்சடி:

தேவையான பொருட்கள்:

1. மாங்காய்
2. வேப்பம்பூ
3. வெல்லம்
4.காய்ந்த மிளகாய்
5.எண்ணெய் –
6.நெய் –
7.பெருங்காயத்தூள்

செய்முறை: 

1. முதலில் மாங்காய் துண்டுகளை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு, வானலியில் நெய் விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

3. அதன் பின்பு, கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

4. இறுதியாக அதில், மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து பச்சடி பதத்திற்கு கொதிக்க விடவும். இப்போது நெய்யில் வறுத்த வேப்பம்பூ சேர்த்து பரிமாறினால் நூற்றாண்டு ஸ்பெஷல் வேப்பம்பூ பச்சடி
தயார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close