Advertisment

இம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?

Cauliflower Recipes: காலிஃப்ளவர் சத்தான, சுவையான ஒரு உணவு. காலிஃப்ளவர் சூப் எப்படி செய்வது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?

Tamil Recipe News, Cauliflower Soup Tamil Video: காலிஃப்ளவர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவுப் பொருள். அதிக ஊட்டச்சத்து கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள், தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க காலிஃப்ளவர் உதவுகிறது.

Advertisment

காலிஃப்ளவரை பக்கோடா, வறுவல், கூட்டு என்றுதான் சாப்பிட வேண்டும் என கிடையாது. காலிஃப்ளவர் சத்தான, சுவையான ஒரு உணவு. காலிஃப்ளவர் சூப் எப்படி செய்வது? என இங்கு பார்க்கலாம்.

Cauliflower Soup Tamil Video: காலிஃப்ளவர் சூப்

காலிஃப்ளவர் சூப் செய்யத் தேவையான பொருட்கள்: துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப், காலிஃப்ளவர் தண்டு - அரை கப், கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பால் - ஒரு கப், மிளகுத்தூள் - சிறிதளவு, பூண்டு - 5 பற்கள், நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவைக்கேற்ப

காலிஃப்ளவர் சூப் செய்முறை:

காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து துருவிய காலிஃப்ளவரை வதக்கவும். அப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்வது முக்கியம். இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து கிளறி விடவும். கோதுமை மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

பின்னர் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இதனுடன் பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். இப்போது சத்தான சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment