Advertisment

லேடீஸ் ‘மிஸ்’ பண்ணக்கூடாத உணவு இது: டேஸ்டியான உளுந்து களி செய்முறை

Karuppu Ulundhu Kali Recipe In Tamil : சத்தான இந்த உளுந்து களியை சுவையாக எப்படி தயார் செய்வது? என இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
லேடீஸ் ‘மிஸ்’ பண்ணக்கூடாத உணவு இது: டேஸ்டியான உளுந்து களி செய்முறை

Karuppu Ulundhu Kali Recipe, PC: Virudhunagar Samayal/ Youtube

Tamil Recipe News, Ulundhu Kali Tamil Video: நம் சமையலறையில் எளிதாக கிடைக்கும் ஐந்தே பொருட்களை வைத்து, உடலுக்கு வலிமை தரும் சத்தான ஒரு உணவுப் பொருளை சமைக்கலாம். அதுதான், உளுந்து களி. கருப்பு உளுந்து, கருப்பட்டி கலந்து தயாரிக்கப்படும் இந்தக் களி தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Advertisment

குறிப்பாக பெண்கள் உடல் நலனுக்கு அத்தியாவசிய உணவாக இதைக் குறிப்பிடலாம். பெண்கள் இதைச் சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில் முதுகு வலி வராது. எலும்புக்கு மிகவும் நல்லது. சத்தான இந்த உளுந்து களியை சுவையாக எப்படி தயார் செய்வது? என இங்கு பார்க்கலாம்.

Ulundhu Kali Tamil Video: உளுந்து களி

உளுந்து களி செய்யத் தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப், கருப்பு உளுந்து - 1 கப், கருப்பட்டி - 1 கப், நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி அளவு, தேங்காய் துருவல் - அரை கப்

உளுந்து களி செய்முறை :

முதலில் அரிசி, உளுந்து இரண்டையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை தூளாக்கி, அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். பிறகு அதை வடிகட்டி ஆற வைக்கவும்

ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை கொட்டி அதனுடன் கருப்பட்டி தண்ணீர், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேருங்கள். இதனுடன் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். பிறகு அந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டி விழாமல் கிளற வேண்டும்.

அடுப்பில் தீயை மிதமாக வைத்து சிறிது சிறிதாக நல்லெண்ணெய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி விடுங்கள்.

அல்வா பதத்திற்கு வரும்போது இறக்கவும். சத்தான இந்த உணவுப் பொருள், டேஸ்டியாகவும் இருக்கும். காலை டிபனாகவோ, அல்லது மாலை நேர உணவாகவோ இதை பயன்படுத்த முடியும். முயற்சித்துப் பாருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment