காய்கறியே இல்லாத குருமா.. சப்பாத்திக்கு சாப்பிட்டா எப்படி இருக்கும் பாருங்க!

சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ் ஒன்று உள்ளது. அது தான் ப்ளைன் குருமா.

aviyal recipe tamil chettinadu aviyal
aviyal recipe tamil chettinadu aviyal

tamil recipes chapathi kuruma recipe : உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி தான் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ் ஒன்று உள்ளது. அது தான் ப்ளைன் குருமா.

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். * பின் அதில் பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்கவும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். * பிறகு தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்குவதற்குள், மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக வைத்துக் கொள்ளவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிறிது நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். * அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ப்ளைன் குருமா ரெடி!

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil recipes chapathi kuruma recipe chapathi kuruma in tamil chapathi kuruma recipe in tamil

Next Story
செம்ம டேஸ்ட் இஞ்சி ரசம்: எளிய செய்முறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com