Tamil Serial News: சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘அத்திப்பூக்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் சந்தியா. அந்த சீரியலில் ரியல் லைஃப் ஜோடியான சேத்தன் - தேவதர்ஷினி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்தார் சந்தியா. தனது கணவரை மச்சான் மச்சான் என அழைக்கும், மலைவாழ் பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாகவும் நடித்தார்.
தண்ணீருக்குள் ‘கூல்’ ஹன்ஸிகா, பாப்கார்ன் ஆண்ட்ரியா: புகைப்படத் தொகுப்பு
,
இவரின் முழுப் பெயர் சந்தியா ஜகர்லமுடி. தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி துறையிலும், சில தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். சந்தியா 1985 ஏப்ரல் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். எஸ்.என்.சக்தி வேல் இயக்கி, ராதா கிருஷ்ணன் தயாரித்த ’செல்லமடி நீ எனக்கு’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
,
சந்தியா தனது பள்ளிப்படிப்பை செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்தார். அதைத் தொடர்ந்து, M.A ஆங்கில இலக்கியம், M.Sc உளவியல் ஆகிய முதுகலைப் பட்டங்களையும் தன் வசம் வைத்துள்ளார். சந்தியா ஜகர்லமுடி ஒரு பன்முகத் திறமை கொண்ட பெண். அவர் தனது கல்வியில் தொடங்கி தனது வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது வரை எல்லா வழிகளிலும் பெர்ஃபெக்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத், தெலுங்கானா, ஆனால் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருப்பதால், சென்னையில் வசிக்கிறார்.
,
சந்தியா ஜகரலமுடி திருமணம் செய்து கொண்டாலும், அவர் நடிப்பை விட்டு வெளியேறவில்லை. நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து நடிக்கிறார். ஓய்வு நேரங்களில் நடனமாடுவது, பாட்டு பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சந்தியா. அதோடு தான் வளர்க்கும் செல்லப் பறவைகளுடன் நேரத்தை செலவிடுகிறார். இதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஆதாரம்.
,
ஐ.இ.தமிழ் முகநூல் நேரலை : இன்று மாலை 06:30 மணிக்கு நம்முடன் இணைகிறார் திருநாவுக்கரசர்
சந்தியா சிரஞ்சீவியின் மிகப் பெரிய ரசிகை. அவருக்குப் பிடித்த நடிகை குஷ்பூ. பிடித்த உணவு சிக்கன். எல்லா நிறமும் பிடிக்கும் என்றாலும், நீலம் தான் சந்தியாவின் ஆல்டைம் ஃபேவரிட். சிரஞ்சீவி நடித்த ’மெக்கானிக் அல்லூட்’ என்ற திரைப்படம் தான் அவருக்கு எப்போதும் பிடித்த படம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”