Vijay TV Ancher Priyanka Photoshoot : தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவுக்கள் அனைத்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் உண்டு. இந்த ஷோக்களின் மூலம் விஜய் டிவி ஆர்பி ரேட்டிங்கில் பல நாட்கள் முதலிடத்திலும் வந்துள்ளது. இந்த ஷோக்கள் மட்டுமல்லாது, இந்த ஷோக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் தனி இடம் உண்டு.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் கால்பதித்து, நடிகையாக உயர்ந்தவர்களும் இதில் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் விஜய் டிவியில் உள்ள ஒரே ஒரு பெண் தொகுப்பாளினி இவர் மட்டுமே.
அந்த வகையில் ரசிகர்களின் வலிமையான ஆதரவை பெற்றுள்ள தொகுப்பாளினி பிரியங்கா தற்போது சினிமா நடிகைகளுக்குகே சவால் விடும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் தற்போது இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளன.
விஜய் டிவி விஜே பிரியங்காவின் கியூட் புகைப்படம்
தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.