புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று சித்திரை விழாவை நாட்டுப்புறக் கலைஞர்களுடன் கோலாகலமாக கொண்டாடினார்.

சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று(11.04.2023) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் சபாநாயகர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பை அழைப்பு கொடுத்து அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் முதலமைச்சர் ந.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள், துறைத் தலைவர்கள், தேசிய விருதாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கலை பண்பாட்டு துறை சார்பில் தமிழர் தம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2023 சிறுதானிய ஆண்டைப் போற்றும் விதமாக நிகழ்ச்சியின் முடிவில் விருந்தினர்களுக்கு சிறுதானிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.
