முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தும் புது லேண்ட் ரோவர் காரில் இவ்வளவு சிறப்பு அம்சங்களா?

லேண்ட் ரோவர் டிஃபென்டர் என்பது ஒரு பிரீமியம் லைஃப்ஸ்டைல் ​​சொகுசு கார். இதன் உட்புற வடிவமைப்பு ஆடம்பரமாக இருக்கும். அதேவேளையில், சாலைகள் அல்லாத நிலப்பரப்புகளில் பயணிப்பதில் திறமை வாய்ந்தது.

Tamilnadu CM Stalin Update IN Tamil : தென்னிந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் வெள்ளை நிற லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரை வாங்கியுள்ளார்.

சென்னை சாலைகளில் தனது கான்வாய்க்கு நடுவில், வெள்ளை நிற ரோவர் டிஃபென்டர் காரில் ஸ்டாலின் அடிக்கடி பயணிப்பதை பார்க்கமுடிகிறது. ஆனால் டிஃபென்டரின் பெட்ரோல் அல்லது டீசல் வகையில் ஸ்டாலின் எதைத் தேர்ந்தெடுத்தார் என்பது தெளிவாக தெரியவில்லை, இருப்பினும் ஸ்டாலின் பயன்படுத்தும் டிஃபெண்டர் கார், ஐந்து கதவுகளை கொண்ட பதிப்பாகும். டிஃபென்டர் 110 எஸ்யூவியின் முதன்மை மாறுபாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய மற்றும் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் வகை சொகுசு கார்கள் மீது ஸ்டாலினுக்கு விருப்பம் உள்ளது பலருக்கும் தெரியாது. ஸ்டாலினிடம், லேண்ட் ரோவர் டிஃபென்டர் தவிர, வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் மற்றும் கருப்பு நிற லெக்ஸஸ் எல்எக்ஸ் 470 போன்ற சில குறிப்பிடத்தக்க SUVகள் அவரது சேகரிப்பில் உள்ளன.

ஆடம்பரமான வெள்ளை நிற லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரை ஸ்டாலின் மட்டும் பயன்படுத்தவில்லை. கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற எம்பி விஜய் வசந்த் சமீபத்தில், தனது பழைய டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் பதிலாக சிவப்பு நிற டிஃபென்டர் 110ஐ வாங்கியுள்ளார். இவர் அரசியல்வாதி மட்டுமல்லாமல், பிரபல தொழிலளதிபரும் ஆவார். மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

லேண்ட் ரோவர் டிஃபென்டர் என்பது ஒரு பிரீமியம் லைஃப்ஸ்டைல் ​​சொகுசு கார். இதன் உட்புற வடிவமைப்பு ஆடம்பரமாக இருக்கும். அதேவேளையில், சாலைகள் அல்லாத நிலப்பரப்புகளில் பயணிப்பதில் திறமை வாய்ந்தது. டிஃபெண்டர் மூன்று கதவு பதிப்பு மற்றும் 5 கதவு பதிப்பு என இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. 3-கதவு பதிப்பு கொண்ட டிஃபென்டர் 90 ஒப்பீட்டளவில் அதன் சிறிய அளவு மற்றும் தனித்துவமான மூன்று-கதவு தோற்றத்திற்காக விரும்பப்படுகிறது. 3-கதவு பதிப்பின் தனித்தன்மையை விட நடைமுறையை அதிகம் விரும்கிறவர்கள் 5-கதவு பதிப்பு கொண்ட டிஃபென்டர் 110 ஐ தேர்ந்தெடுக்கின்றனர்.

லேண்ட் ரோவர் டிஃபென்டருக்கு மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன. அதில் இரண்டு பெட்ரோல் மூலம் இயங்கும். மற்றொரு வகை டீசலில் இயங்கும். பெட்ரோல் என்ஜினில் 2.0-லிட்டர் 300 PS டர்போ-பெட்ரோல் மற்றும் 3.0-லிட்டர் 400 PS டர்போ-பெட்ரோல் என்ஜின் என இரண்டு வகைகள் உள்ளன. மறுபுறம், டிஃபென்டரில் கிடைக்கக்கூடிய ஒரே டீசல் என்ஜின் 3.0 lit mill, இது 300 PS ஆற்றலை உற்பத்தி செய்கிறது. டிஃபென்டரின் அனைத்து பதிப்புகள் மற்றும் என்ஜின் வகைகளும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் தரமாக வருகிறது. இதன் ஆரம்பவிலை ரூ.86.24 லட்சத்தில் தொடங்கி ரூ.1.08 கோடி வரை செல்கிறது.

இந்தியாவில் அறிமுகப்படுத்த நாளிலிருந்து, லேண்ட் ரோவர் டிஃபென்டர் அதன் கவரக்கூடிய சாலை நிலைப்பாடு, ஆடம்பரமான மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த உள் கட்டமைப்பு மற்றும் அதன் ஈடு செய்ய முடியாத ஆஃப் ரோடு டிரைவிபிலிட்டி ஆகியவற்றிற்காக உயர்மட்ட மக்களிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm mk stalin new land rover defender car review

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com