Tasty Tomato Chutney Recipe Tamil : இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எந்த வகையான உணவுக்குப் பக்கா சைடு டிஷ்ஷாக இருக்கும் இந்த எளிமையான தக்காளி சட்னி. புளிப்பு, காரம், இனிப்பு என அத்தனை சுவையும் ஒன்றிணைந்த இந்த தக்காளி சட்னி நிச்சயம் உங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒன்றாக இருக்கும்.
தேவையான பொருள்கள் :
பெரிய தக்காளி (நறுக்கியது) - 2
பூண்டு - பற்கள்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
காஷ்மீரி உலர்ந்த சிவப்பு மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
சர்க்கரை - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். வெந்தயம் சேர்ப்பது சட்னிக்கு ஓர் நல்ல சுவையைத் தருகிறது.
பருப்பு தங்கப் பழுப்பு நிறமாக மாறும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்கவும்.
இதனோடு பூண்டு, தக்காளி மற்றும் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் முழுமையாக ஆவியாகி தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்.
இந்தக் கலவையை முழுமையாகக் குளிரவைத்து, மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
தண்ணீர் சேர்க்காமல் மென்மையான பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயை சூடாக்கி, எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்க்கவும்.
தாளிப்பு முடிந்தவுடன் அதனைத் தக்காளி சட்னி மீது ஊற்றவும்.
இந்த சுவையான எளிய சட்னியை சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"