டீ மாஸ்டரின் குறைந்தபட்ச ஆசை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த ரோட்டில் தான் கடந்த 12 வருடங்களாக டீ விற்று வருகிறேன்

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி  ஆசை இருக்கும்.  சைக்கிலில் செல்பவனுக்கு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை. பைக்கில் செல்பவனுக்கு  கார் வாங்க வேண்டும் என்ற ஆசை. இதுப்போல் ஒவ்வொருவரின் ஆசையும் அவர்களின் இடம், சூழ்நிலை, பொருளாதாரம் பொருத்து அமையும்.

இதுப்போல் தான் மும்பை பிரதான சாலையில் டீ விற்கும் ஒருவரின் ஆசை என்னவென்று கேட்டால். அவர் கூறிய பதில்  கேட்பவர்களின்  கண்களில் நீரை வரவைத்துள்ளது. ”நான் இந்த ரோட்டில் தான் கடந்த 12 வருடங்களாக டீ விற்று வருகிறேன்.  இங்கு இருக்கும்  மெக்டொனால்டிற்கு தினமும் நிறைய பேர்  வந்து செல்வார்கள்.

அதையெல்லாம் பார்க்கும் போது ஒருநாள் என் குழந்தைகளையும் அங்கு கூடிட்டு போய் அவர்களுக்கு என்ன வேணுமோம் அதெயெல்லாம் வாங்கி தரணும். அதுதான் என்னோடைய நீண்ட ஆசையாக இருந்தது. நான் நினைத்தப்படியே ஒரு நாள் அது நடந்தது. 2 மாதம் விடாமல் காலை, இரவு என உழைத்தேன். சரியாக நான்கு பேர் சாப்பிட எவ்வளவு பணம்செலவாகும்  என்று கூட எனக்கு  தெரியாது.

ஏனென்றால்,முன்னப்பின்ன நாங்கள் அது உள்ளே கூட சென்று  விலை கேட்டதில்லை. என் பிள்ளைகளை முதல் முறை கூடிட்டு போகும்போது, பணம் பற்றாமல் அவர்கள் விரும்பியதை  வாங்கிக் கொடுக்க முடியாமல் போயிவிட கூடாது என்பதற்காகவே எவ்வளவு முடியுமா அவ்வளவு  பணத்தை சேர்த்தேன்.

பின்பு, என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு புதுத்துணி வாங்கி வந்து அவர்களை மெக்டொனால்டிற்கு அழைத்து சென்றேன்.   அவர்கள் விரும்பியபடி, பர்கர்,  சேன் வீட்ச்,இன்னும் என்னனோமோ பெயர் சொன்னாங்க அதையெல்லாம் வாங்கி தந்தேன். என் பிள்ளைகளுக்கு சந்தோஷம் தாங்கல.  அன்றைய தினம்  என் பிள்ளைகளுக்கு நான் தான் ஹீரோ.

எப்படி அப்பா, எப்படி அப்பானு  கேட்டுக்கிட்டே இருந்தாங்க.  சாப்பிட்டு வெளியே  வந்தோம்.  நான் டீ விக்கற இடத்தில் இருக்கற மத்த கடை க்காரங்க எல்லாரும் என்னையே பாத்தாங்க. எனக்கு அவ்வளவு  கெளரமாக இருந்தது. இது தான் என்னால் மறக்க முடியாத  சந்தோஷம், ஆசை எல்லாமே” என்று கூறியுள்ளார்.

“When were you the happiest?” “There was some event happening at a big hotel nearby. And after lunch everyone wanted…

Posted by Humans of Bombay on 25 एप्रिल 2018

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close