Advertisment

இவ்ளோ சிம்பிள் வழி இருக்கா? ஆழ்ந்த தூக்கத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் மசாஜ்

Technique to sleep soon தேங்காய் எண்ணெய்யை உள்ளங்காலில் தடவி, சிறிய வெண்கல பாத்திரத்துடன் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

author-image
WebDesk
New Update
Technique to sleep soon and relaxed sleep illaness covid 19 Tamil News

Technique to sleep soon and relaxed

Technique to Sleep Soon and Relaxed Tamil News : உடல் ஆரோக்கியத்திற்கு நிச்சயம் இரவில் நல்ல உறக்கம் தேவை. ஆனால், கோவிட் ஆரம்பத்திலிருந்து மோசமான தூக்கத்துடன் அமைதியற்ற இரவுகளைப் பற்றி நிறைய பேர் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். உங்களுக்கும் தூங்குவதில் சிக்கல் இருந்தால், எந்தவொரு வெற்றியும் இல்லாமல் ஏற்கெனவே பல்வேறு முறைகளை முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்திருந்தால், ரேகா திவேகர் பரிந்துரைக்கும் இந்த பண்டைய ஆயுர்வேத நுட்பம் உங்களுக்கு உதவும்.

திவேகரின் கூற்றுப்படி, கன்சா அல்லது தாமிரம், தகரம் மற்றும் துத்தநாகம் அல்லது வெண்கலத்தால் ஆன அலாய் ஒருவரின் தூக்கத்தை மீட்டெடுக்கலாம்.

நாட்டு மாட்டின் நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை வெண்கலப் பாத்திரத்துடன் பாதத்தின் நடுப்பகுதியில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, நிதானத்தைத் தூண்டும். இது, ஒருவர் விரைவாகவும் ஆழமாகவும் தூங்க உதவுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rekha Diwekar (@rekhadiwekar)

அதை எப்படிச் செய்வது?

படுகைக்குச் செல்வதற்கு முன், நாட்டு மாடின் நெய் / தேங்காய் எண்ணெய்யை உள்ளங்காலில் தடவி, சிறிய வெண்கல பாத்திரத்துடன் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

"ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, நீங்கள் நன்றாகத் தூங்கினால், உடலில் செல்களை சரிசெய்ய அல்லது உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தவும் உதவுகிறது" என்று திவேகர் பரிந்துரைத்தார்.

இந்த நுட்பம் உடலுக்கு ஏன் பயனளிக்கிறது?

* இந்த செயல்முறை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே, மூட்டுகளில் தசை வலிமையை மேம்படுத்துகிறது.

* சோர்வடைந்த கண்களைத் தளர்த்துகிறது.

* நன்றாகத் தூங்க வழிவகுக்கிறது. "குறிப்பாக நீங்கள் அதிகாலை 4 அல்லது 4.30 மணிக்கு எழுந்து மீண்டும் தூங்கச் செல்ல முடியாவிட்டால், இந்த நடைமுறை உங்களுக்கு உதவும்" என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Sleep Illness
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment