Advertisment

தைப் பொங்கல் 4 நாள் திருவிழா மகத்துவம்: பொங்கல் பானை வைக்கும் நேரம் இதுதான்!

Pongal Boghi 2021 Significance Dates Time தை பொங்கலுக்கான நல்ல நேரம் வியாழக்கிழமை காலை 8.29 மணி.

author-image
WebDesk
New Update
Maatu Pongal Kanum Pongal Boghi 2021 Significance Dates Time Tamil News

Maatu Pongal Kanum Pongal Boghi 2021 Significance Dates Time

Thai Pongal Tamil News, Pongal dates and Time Tamil News : தமிழகத்தின் மிகவும் பிரபலமான அறுவடை திருவிழாவான பொங்கல் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை கொண்டாடப்படும். இதனைத் தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. பிரபலமான கலாச்சாரத்தில் 'ஹக்கி' அல்லது 'பொங்கலி' என்றும் அழைக்கப்படுகிறது.

Advertisment

சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் அலங்கரிக்கும் போது போகி பண்டிகை தொடங்கி, சூரிய கடவுளின் ஆசீர்வாதம் பெற மக்கள் சிறப்புப் பூஜை செய்யும்போது, பொங்கலின் முக்கிய நாளான இரண்டாவது நாள் தை பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அலங்கரித்து வணங்கிப் பொங்கலின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய உணவு பகிர்தலுடன் கொண்டாட்டத்திற்காக மக்கள் கூடும் போது பொங்கலின் நான்காவது மற்றும் இறுதி நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது.

2021-ம் ஆண்டு பொங்கலின் முழுமையான நேர அட்டவணை

போகி பண்டிகை - ஜனவரி 13 (புதன்கிழமை)

தை பொங்கல் அல்லது சூரிய பொங்கல் - ஜனவரி 14 (வியாழக்கிழமை)

மாட்டுப் பொங்கல் - ஜனவரி 15 (வெள்ளிக்கிழமை)

காணும் பொங்கல் - ஜனவரி 16 (சனிக்கிழமை)

தை பொங்கலுக்கான நல்ல நேரம்

தை பொங்கலுக்கான நல்ல நேரம் வியாழக்கிழமை காலை 8.29 மணி.

பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

பொங்கல் நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த அறுவடை விழாவைக் கொண்டாடச் சிறப்புக் கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். சூரிய கடவுளின் ஆசீர்வாதங்களைத் தேடுவதற்கும், முக்கியமான வளங்களை வழங்கிய இயற்கைக்கு நன்றி செலுத்துவதற்கும் மக்கள் பல்வேறு வகையான பூஜைகளை செய்கிறார்கள்.

பொங்கலின் நான்கு நாட்களில் மெது வடை, அவியல், ரசம், பீட்ரூட் பச்சடி, சர்க்கரை பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் போன்ற சிறப்பு உணவுப் பதார்த்தங்களும் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது அதிகமாகப் பரவிவரும் COVID-19 தொற்றுநோய், 1 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது மற்றும் இதுவரை இந்தியாவில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளது. அதனால், இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Pongal Mattu Pongal Kanum Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment