Advertisment

தாய்லாந்து மாதங்களுக்கு தமிழ் பெயரா? இன்ஸ்டா வீடியோ

தாய் மொழியில் பேசும் சில வார்த்தைகள் கூட தமிழ் மொழியோடு ஒத்துப் போவதாக இருக்கும்.

author-image
abhisudha
New Update
lifestyle

Thailand Insta Video

கம்போடியா, லாவோஸ், வியட்நாம் போன்ற கம்யூனிச நாடுகள் சூழ்ந்திருக்க இன்றளவும் மன்னராட்சி நடக்கும் ஒரு நாடு தாய்லாந்து.

Advertisment

தாய்லாந்து ஒரு புத்தபூமி. கிட்டத்தட்ட 30,000 புத்த மடாலயங்கள் இங்கு உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய புத்தர் சிலைகளில் சில தாய்லாந்தில் தான் இருக்கிறது.

தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ’தாய்’ மொழி இருக்கிறது. இந்த மொழி கெமர், பல்லவ கிரந்தம் மொழியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி. இதில் பல்லவ கிரந்தம் என்பது தமிழ்நாட்டின் பல்லவர்களைக் குறிப்பிட்டு தமிழைக் குறிப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தாய்லாந்து

தாய்லாந்து

தாய் மொழியில் பேசும் சில வார்த்தைகள் கூட தமிழ் மொழியோடு ஒத்துப் போவதாக இருக்கும். தமிழர்களின் சங்க கால கூத்து, பொம்மலாட்டங்கள், சிலம்பம் வீர பயிற்சிகள் தாய்லாந்தின் வழக்கத்திலும் இருந்து வருகிறது.

நமக்கு ஆங்கில வருடம் போக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 தமிழ் வருடபிறப்பு இருக்கிறது, சித்திரை, வைகாசி என 12 மாதங்கள் இருக்கிறது. அதுபோல தமிழ் மாதங்களையும், தாய்லாந்து மாதங்களையும் ஒப்பிடும் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி உள்ளது.

ரிஷபம், மேஷபம், சிம்மம் என நாம் 12 ராசிகளை சொல்வதுண்டு, தாய்லாந்தில் 12 மாதங்களுக்கும், இந்த 12 ராசிகளின் பெயரைத் தான் சூட்டி உள்ளனர்.

அந்த வீடியோ பாருங்க…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment