‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! இந்த குரலைத் தெரியும்... ஆளைத் தெரியுமா?

ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷன் போனதும் நம்மையுமறியாமல் ஒரு குரல் நம்மை ஈர்த்துக்கொள்ளும்..

சரளா சவுத்ரி குரல்:

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு…..” இந்த குரலை கேட்டதும் ஸ்பீக்கரை திரும்பி பார்க்காத நபர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த குரல் நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்று. ரயில் நிலையத்தில் பணிப்புரிபவர்களிடம் கேட்டு பாருங்கள் இந்த குரல் தான் எங்களுக்கு தாலாட்டு என்பார்கள்.

அப்படியொரு மென்மை, கம்பீரம் இரண்டுமே இருக்கும் அந்த குரலில். வெறும் 30 வினாடிகள் மட்டுமே அந்த குரலை அவ்வளவு எளிதாக பயணிகள் மறந்து விடமாட்கள்.நாள் ஒன்றுக்கு ஆயிரம் முறை ஒலிக்கும் “இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா….?

சரளா சவுத்ரி. 53 வயதாகும் இவர் 1982-ல் சென்ட்ரல் ரயில்வேக்கு அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் மேனுவல் தான். கம்ப்யூட்டர் கிடையாது. தற்செயலாய் இன்ஸ்பெக்சனுக்கு சென்றிருந்த ரயில்வே பொது மேலாளர் அட்ஸோத் பேனட்ஜி , இந்த குரலை கேட்டுவிட்டு உடனடியாக அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். மராத்தியில் ஒலிக்கு இவரது குரல் கணினி மூலம் எல்லா ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆரம்பக காலத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து வந்த சரளா சவுத்ரி, மாருதி ட்ராபிக் தகவல்களை தினமும் காலையில் மக்களுக்கு அறிவிப்பார்.அதன் பின்பு தான், தனது தந்தையில் ஆசைப்படி ரயில்வே நிர்வாகத்தில் பணிப்புரிய தொடங்கினார்.

இவரின் குரலை பதிவு செய்த அன்று, அவருடன் பணிப்புரிந்த ஒட்டு மொத்த ஊழியர்களும் உன் குரலுக்கு நீ கண்டிபாக சுத்தி போட வேண்டும், கலாய்த்தார்களாம். சரளா தனது 49 ஆவது வயதில் சொந்த காரணங்களுக்காக ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு துறைக்கு சென்றுவிட்டார்.

ஆனால், அவரின் குரல் இன்னமும் ரயில்வேக்கு பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close