Advertisment

தனிமைப்படுத்தலின் போது, குடும்பத்துடன் மீண்டும் இணைந்திருக்க எளிய வழிகள்!

இந்த நேரத்தை நல்ல பயனுள்ள வகையில் உபயோகிக்கும் தேவை நமக்கு இருக்கிறது. அதே போல நம்மால் முடிந்த வரையில், மீண்டும் குடும்பத்துடன் இணைந்து பழக முயற்சி செய்வோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
things to do at home, quarantine period, staying in with family, family activities, indian express, indian express news,

things to do at home, quarantine period, staying in with family, family activities, indian express, indian express news,

இந்த நேரத்தை நல்ல பயனுள்ள வகையில் உபயோகிக்கும் தேவை நமக்கு இருக்கிறது. அதே போல நம்மால் முடிந்த வரையில், மீண்டும் குடும்பத்துடன் இணைந்து பழக முயற்சி செய்வோம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக்குள் அடைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். இப்போது நாம் நமது குடும்ப உறுப்பினர்களிடம் அதிக அளவுக்கு பேச வேண்டும். தனிப்படுத்தப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், யாருடன் இணைந்து நாம் தனிப்படுத்தப்படுகின்றோம் என்பதை நாம் உண்மையில் தேர்ந்தெடுக்க முடியாது. அதே போல, இந்த நேரத்தை நல்ல பயனுள்ள வகையில் உபயோகிக்கும் தேவை நமக்கு இருக்கிறது. அதே போல நம்மால் முடிந்த வரையில், மீண்டும் குடும்பத்துடன் இணைந்து பழக முயற்சி செய்வோம். சுயநலமாக இருப்பதற்கு இது ஏற்ற நேரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் அல்லது உங்கள் மனைவி அல்லது துணைவர் மன அழுத்தத்துக்குக்கூட ஆளாகக் கூடும். வீட்டு வேலைகள் மற்றும் வேலையின் கெடுவை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் எதை பாதுகாக்கப்போகின்றோம்.

முடங்கி இருக்கும்போது, தனிமைப்படுத்தப்படுதல் காலகட்டத்தை ஒவ்வொருவரும் எளிதாக உணர உங்களால் செய்யக் கூடிய எளிமையான சில விஷயங்கள் இங்கே கூறப்பட்டுள்ளன.

publive-image

காது கொடுத்துக் கேளுங்கள் ஆதரவு கொடுங்கள்

உங்கள் வீட்டு சூழல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களும் கூட தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும். இது ஒரு புதுவிதமான சூழல், ஒவ்வொருவரும் ஒட்டு மொத்தமாக இதனைப் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட ஆரம்பிக்கும்போது, உணர்வுகளுக்குள்ளும், ஆளுமைகளுக்குள்ளும் மோதல் ஏறப்டலாம். ஆகவே, யாரேனும் ஒருவர் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். மற்றவர்கள் பகுத்தறிவு அற்ற முறையில் நடந்து கொண்டனர் என்று நீங்கள் கருதினாலும் கூட, அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவைக் கொடுங்கள்.

மரியாதையுடன் இருங்கள்

சிலர், அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள். இது போன்ற தருணங்களில் பீதியடைவார்கள். ஆகையால், அவர்கள், தங்கள் விரக்தி வெளியேற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அதை வெளிபடுத்துவதற்கான ஒருவராக உங்களைப் பார்ப்பார்கள். நீங்கள் அதனை தாங்கிக் கொள்ளும் நிகழ்வில் இருந்தால், பதிலாக கோப ப்படாதீர்கள், அதிக கோபத்தை ஏற்படுத்தாதீர்கள். இது சூழலை மேலும் அதிகரிக்கும், வீட்டுக்குள் நிலவும் ஆனந்தத்தை குலைப்பதாக ஆகிவிடும். நீங்கள் மரியாதையுடன் இருப்பதும் மற்றும் மிக மெல்லிய முறையில் பதில் அளிப்பதும் கட்டாயமாகும். நீங்கள் தவறான முடிவு எடுத்திருந்தீர்கள் என்றால், உடனடியாக மன்னித்து விடுங்கள். இங்கே நீங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்வது முக்கியமாகும்.

publive-image

நீங்கள் இணைந்திருக்கும் வகையில் சில பணிகளில் ஈடுபடுங்கள்

நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையிலான வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். அல்லது நீங்களும் உங்கள் துணைவரும் விரும்பக் கூடிய உடற்பயிற்சியில் வழக்கம்போல ஈடுபடலாம். அல்லது ஒரு சினிமா அல்லது வெப் சீரியலை இருவரும் இணைந்து பார்ப்பதன் மூலம் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியடையலாம். இது ஒரு சிக்கலான சூழல். ஒரு குழுவாக பணியாற்றுதல் என்ற ஆலோசனையால், இணைந்து போராடுவோம், உடல், மன ரீதியாக இரண்டிலும் ஆரோக்கியத்துடன் இருப்போம்.

உபயோகமான வழியில் நேரத்தைச் செலவிடுங்கள்

இது உங்கள் குடும்பத்துடன் இணைந்திருக்கக்கூடிய நல்ல நேரமாகும். உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்வது பற்றி சிந்தனை செய்யுங்கள். எப்போதுமே ஒடிக்கொண்டே இருக்கும் வேலையில், அவர்களுடன் எப்போதாவதுதான் அவர்களுடன் பேசுகின்றோம். இப்போது, தற்போதைய சூழ்நிலையானது, வீட்டில் இருந்து நம்மை வேலை பார்க்கும் சூழலை நோக்கித் தள்ளியிருக்கிறது. மேலும் நெகிழ்வான நேரங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவர்களுடன் அதிக நேரம் அமர்ந்து பேசுவோம். அடிக்கடி அவர்களுடன் அமர்ந்து, ஒன்று அல்லது இரண்டு ஜோக்குகள் சொல்லி சிரிக்கலாம். விஷயங்கள் பற்றி பேசலாம். நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாம்.

நினைவுகளை உருவாக்குங்கள்

அனைத்து விஷயங்கள் குறித்து கற்பனை செய்யுங்கள். நம்மிடம் இருந்து எதிர்கால சந்ததியினர் அனைத்து கதைகளையும் கேட்க விரும்புகின்றனர். இந்த சர்வதேச பிரச்னை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒன்று. உங்களுடைய இடத்தின் சூழலில் மட்டும் அல்லாமல், நாடு முழுவதும்,உலகம் முழுவதும் கூட உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு சாத்தியமோ அந்த அளவுக்கு பல நினைவுகளை உருவாக்குங்கள். இந்த அனுபவத்தில் இருந்து ஏதேனும் கற்றுக் கொள்ளுங்கள். பல, பல கதைகளை சேகரித்து அறிந்து கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment