Advertisment

எடை குறைப்பு, நுரையீரல் நலம்… திப்பிலி நன்மையை தெரிஞ்சுக்கோங்க!

Important medic benefits of Long Pepper (Pippali) in tamil: மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், இன்னும் பல்வேறு சுவாச பிரச்சினைகளை சரிசெய்யவும் திப்பிலி உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thippili benefits in tamil: health benefits of Long Pepper tamil

Thippili benefits in tamil: திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்று அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக பயன்படுகிறது. இந்த 3 மூலிகை பொருட்களில் இடம் பிடித்துள்ள முக்கிய பொருள் திப்பிலி ஆகும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ள இந்த மருத்துவ திப்பிலி பயன்களை ஒன்றன் பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம்.

Advertisment

திப்பிலியின் மருத்துவ பயன்கள்

திப்பிலி மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், பல்வேறு சுவாச பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவுகிறது.

பல் வலியை விரட்டும் திப்பிலி

publive-image

பல்வலி மற்றும் வாய்வழி பிரச்சனைகளை அடித்து விரட்டும் வலி நிவாரணியாக திப்பிலி உள்ளது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் டிக்ளோஃபெனாக் என்ற அழற்சி எதிர்ப்பு மருந்தோடு ஒப்பிடும்போது பல வாய்வழி பிரச்சினைகளுக்கு உதவுகிறது.

மேலும், திப்பிலி பழத்தில் தயார் செய்யப்படும் பேஸ்ட் பயன்படுத்தி வந்தால் பல் வலி பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

தூக்கமின்மையை போக்குகிறது

திப்பிலி செடியின் பழங்களிலிருந்து பெறப்பட்ட அத்தியாவசிய எண்ணெய் தூக்கமின்மை போன்ற தூக்கக் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

திப்பிலியில் உள்ள வலி நிவாரண பண்பு, நமது உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் தூக்கத்தைத் தூண்டவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை நிர்வகிக்க

திப்பிலியின் வேரிலிருந்து கிடைக்கும் சாறு ஆண்டிஹைபர் கிளைசெமிக் மற்றும் ஆண்டிஹைபர் லிபிடெமிக் பண்பைக் கொண்டுள்ளது. இது அதன் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமாகிறது. நீரிழிவு காரணமாக ஏற்படும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

publive-image

காய்ச்சலை குணமாக்குகிறது

திப்பிலியின் தண்டுகளிலிருந்து பெறப்படும் எத்தனால் சாறு ஆன்டிபிரைடிக், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை பாக்டீரியா போன்ற பல அந்நிய பொருட்களால் தூண்டப்படும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

publive-image

திப்பிலி போன்ற சில ஆயுர்வேத மூலிகைகள் அதன் ஹெபாபுரோடெக்டிவ் நடவடிக்கை காரணமாக கல்லீரல் அழற்சி நோயை குணப்படுத்த பயன்படுகிறது.

எடையை இழக்கவும், கொழுப்பை குறைக்கவும் உதவும்

திப்பிலியில் பைபர் உள்ளதால் அவை கொழுப்பைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது. இவற்றில் உள்ள இந்த முக்கிய கலவை பசியை அடக்காமல் எடை இழக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

மலச்சிக்கலுக்கு உதவுகிறது

மலச்சிக்கல், வாய்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல செரிமான சிக்கல்களைத் தடுக்கும் ப்ரீபயாடிக் ஆற்றலை திப்பிலி கொண்டுள்ளது. இதன் நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

மாதவிடாய்க்கு உதவுகிறது

மாதவிடாய் பிடிப்புகள், மேகவெட்டை நோய், கருவுறாமை மற்றும் பாலுணர்ச்சி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு அதிசய மூலிகையாக திப்பிலி உள்ளது. இனப்பெருக்க அமைப்புக்கு இதன் டானிக் பரிந்துரைக்கப்படுகிறது.

publive-image

ஆனால், இவற்றின் நுகர்வு கர்ப்பிணி பெண்களில் கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது

திப்பிலியில் உள்ள பைப்பர் செயலில் உள்ள ஆல்கலாய்டு கெமோபுரோடெக்டிவ் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது புற்றுநோய் உயிரணுக்கள் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. மேலும் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment