Advertisment

உயரம், நிறம் எதுவும் குறை இல்லை: இதோ 3 அடி 4 இன்ச் மாடலின் ஸ்டன்னிங் புகைப்படங்கள்

தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என மனதில் நினைத்துவிட்டால், எதுவும் தடையாக இருக்க முடியாது. துரு ப்ரெஸ்தாக்கு இந்த வரிகள் மிகவும் பொருத்தம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dwarf model, modelling, fashion

தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என மனதில் நினைத்துவிட்டால், எதுவும் தடையாக இருக்க முடியாது. அமெரிக்காவை சேர்ந்த துரு ப்ரெஸ்தா எனும் 21 வயது அழகு மங்கைக்கு இந்த வரிகள் மிகவும் பொருத்தம். 3 அடி 4 இன்ச் மட்டுமே உயரம் கொண்ட துரு, தன் உடல் தோற்றத்தால் மற்றவர்களால் அதிக கேலிக்கும் நகைப்புக்கும் ஆளாகியிருக்கிறார்.

ஆனால், ஒரு மாடலாக வெற்றி பெற வேண்டும் என்ற தன்னுடைய கனவை மட்டும் துரு கைவிட்டுவிடவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று தன் தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் ஒட்டுமொத்த மாடலிங் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் துரு.

”ஃபேஷன் உலகத்தில் இருக்கும் அனைவரும் தாங்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். எல்லோரும் நடக்கும் பாதையில் அனைவரும் நடக்க வழி வேண்டும். அவர்கள் சக்கர நாற்காலியில் இருந்தாலும் சரி, ஊன்றுக்கோளில் இருந்தாலும் சரி”, இதுதான் துரு சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாடம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment