Tulasi Betel Leaf Soup, Thulasi Vethalai Soup: இந்த காலநிலையில் நிறைய பேருக்கு சளி, இருமல் தொல்லை ஏற்படும். இதனை உடனடியாக சரிசெய்ய நினைப்பவர்கள், வெற்றிலை, துளசி சேர்த்து சூப் தயாரித்து பருகலாம். இதனை எப்படி செய்வதென பர்ப்போம்.
துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானதும், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.
நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.
சூப்பரான வெற்றிலை துளசி சூப் ரெடி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”