scorecardresearch

சோர்வடைந்த கண்களுக்குப் புத்துணர்வு தரும் எளிய டிப்ஸ்!

Tips for tired puffy eyes solutions screen time fatigue Tamil News காபி குறைவான தூக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சில சந்தர்ப்பங்களில், நீரிழப்பிற்கும் வழிவகுக்கும்.

Tips for tired puffy eyes solutions screen time fatigue Tamil News
Tips for tired puffy eyes solutions screen time fatigue Tamil News

Tips for tired puffy eyes solutions screen time fatigue Tamil News : நீங்கள் தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருப்பதால், உங்கள் கண்களில் சோர்வு ஊடுருவுவதை உணர முடியுமா? நிச்சயம் இது நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம்.

சோர்வு மற்றும் வீங்கிய கண்கள் சோர்வு, நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது மற்றும் தூக்கமின்மை இவற்றுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது சோம்பல் மற்றும் ஒட்டுமொத்த அதிருப்தி உணர்வை ஏற்படுத்தலாம். எனவே, சோர்வு மற்றும் வீங்கிய கண்களை எவ்வாறு சரிசெய்வது? உங்களுக்காக எங்களிடம் சில தீர்வுகள் உள்ளன:

போதுமான அளவு உறக்கம்

ஹெல்த்லைனின் கூற்றுப்படி, ”ஒரு நல்ல இரவு உறக்கம், கண்களின் வீக்கத்தைக் குறைக்க உதவும். பெரியவர்களுக்கு, இரவில் 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் தேவை” என்று குறிப்பிடுகிறது. தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆபத்துகளுக்கு மத்தியில், எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு முன்னால் நீண்ட நேரம் இருக்க வேண்டும். உங்கள் கண்களில் அதிக அழுத்தத்தைத் தவிர்க்க, நீங்கள் ஒரு நல்ல இரவு ஓய்வு பெற வேண்டும்.

கஃபினை குறைக்கவும்

கஃபின் ஒரு அறியப்பட்ட தூண்டுதலாகும். மேலும், இது ஒரு விரைவான பிக்-மீ-அப்பிற்காக மக்களால் உட்கொள்ளப்படுகிறது. ஆனால், நீங்கள் சோர்வு மற்றும் வீங்கிய கண்களால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இந்த பானத்தை விலக்குவது நல்லது. காபி குறைவான தூக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சில சந்தர்ப்பங்களில், நீரிழப்பிற்கும் வழிவகுக்கும். மேயோ கல்லூரியின்படி, “உறங்குவதற்குக் குறைந்தது 6 மணிநேரத்திற்கு முன் காஃபின் குடிப்பதை நிறுத்த வேண்டும்”.

திரை நேரத்தைக் குறைக்கவும்

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நம் திரை நேரம் கணிசமாக அதிகரித்துள்ளது என்று சொல்வது எளிது. லேப்டாப், தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளில் இருந்து பல்வேறு திரைகளைப் பார்க்கும்போது, இந்த சாதனங்களிலிருந்து நீல ஒளிக் கதிர்களை நாம் வெளிப்படுத்துகிறோம். குறுகிய காலத்திற்குப் பயன்படுத்தும் போது இது கவலைக்குரியது அல்ல. ஆனால், இடைவேளையின்றி பயன்படுத்தும்போது கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்.

நீரேற்றமாக இருங்கள்

ஹெல்த்லைன் படி, முகம் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் நீரிழப்பால் ஏற்படலாம். போதுமான தூக்கம் மற்றும் சரியான ஓய்வுடன், தொடர்ந்து தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tips for tired puffy eyes solutions screen time fatigue tamil news