Advertisment

லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் - ஆரோக்கியமான உறவுக்கு இதை மட்டும் கடைபிடியுங்கள்!

Tips to be Happy in Long Distance Relationship Tamil News ஒரே நேரத்தில் திரைப்படத்தைப் பார்ப்பது, வீடியோ அழைப்பு மூலம் ஒன்றாகச் சமைப்பது அல்லது ஒருவரின் நாளை விர்ச்சுவலாக ஆராய்வது போன்றவற்றை செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tips to be Happy in Long Distance Relationship Tamil News

Tips to be Happy in Long Distance Relationship Tamil News

உறவுக்கு கடைபிடியுங்கள்!

Advertisment

Tips to be Happy in Long Distance Relationship Tamil News : நீண்ட தூர உறவில் இருக்கும் தம்பதிகள் உறவிலும் சிறிதளவு விலகி இருப்பது இயல்பானது. இந்த உணர்வுகள் அவர்கள் 'ஒரே போன்ற சிந்தனையில்' இருக்கிறார்களா, ஒருவருக்காக மற்றொருவர் 'காத்திருப்பதற்கு மதிப்புள்ளதா' அல்லது 'ஒரே வழியில் உணர்கிறார்களா' என்ற சில சந்தேகங்களையும் தருகிறது.

தொலைதூர உறவில் தொழில்நுட்பத்திற்கு அதிக பங்கு உண்டு. தங்களின் பார்ட்னர் வேறு கண்டத்தில் இருந்தாலும், அவர்களுடன் இணைவதையும் தொடர்புகொள்வதையும் தொழில்நுட்பம் எளிதாக்கியுள்ளது. ஆனால், என்னதான் தொழில்நுட்பம் உதவினாலும், உங்கள் உறவை நிலைநிறுத்திக் கொள்ளவும், அதனை நிலையானதாகவும் அழகாகவும் வைத்திருக்க வழிகளைத் தேடுகிறீர்கள் என்றால் தொடர்ந்து படிக்கவும்.

*பரஸ்பர ஒப்புதல்: உங்கள் பார்ட்னர் உங்களைச் சுற்றி உடல் ரீதியாக இருக்கப் போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்வதுதான் இந்த முதல் நிலை. இந்த நிலைக்கு வருவதற்கான காரணத்தை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். வேலை மாற்றம், நிதி தேவைகள், குடும்ப சூழ்நிலைகள் அல்லது வேறு ஏதேனும் காரணமாக வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூறுகளுக்கோ உங்கள் பார்ட்னர் செல்ல நேரிடலாம். இதனை ஏற்றுக்கொள்வது தம்பதியினரை சுமுகமாகப் பயணிக்க உதவும்.

* தொடர்பு முக்கியம்: மக்கள் நீண்ட தூர உறவில் இருக்கும்போது அவ்வப்போது தொடர்பு கொள்வது மிக முக்கியம். சரியான அளவில் பேசுவதும் மற்றும் போதுமான இடைவெளி கொடுப்பதும் முக்கியம். எந்தந்த நேரத்தில் இடைவெளி கொடுக்கவேண்டும் என்பதை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையில் விரும்பினால் மட்டுமே உங்கள் பார்ட்னரை தொடர்பு கொள்ளவேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் அன்றைய தினத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்வது தூரத்திலிருந்து கூட ஒரு முக்கியமான தொடர்பைப் பராமரிக்க உதவும்.

* சமநிலையுடன் இருங்கள்: உங்கள் சார்பு மற்றும் சுதந்திரம் நன்கு சமநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது இரண்டும் உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை உங்கள் துணைக்குத் தெரிகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: வீடியோ அழைப்பு, மின்னஞ்சல் எழுதுதல், கடிதங்கள் மூலம் சர்ப்ரைஸ் செய்வது, ஆன்லைன் பரிசளிப்பு ஆகியவை உங்கள் உறவில் உற்சாகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் நல்ல வழிகள்.

* கேட்பதை பாராட்டுங்கள் : உங்கள் பார்ட்னர் உங்கள் பேச்சைக் கேட்கும்போது உடனடியாக அதனைப் பாராட்டுங்கள். அவர்கள் பேசும்போது ஆர்வம் காட்டுங்கள். பகிர்வதன் மூலம் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க முடியும்.

* செயல்பாடுகளை ஒன்றாகச் செய்யுங்கள்: கணவன் மனைவி உறவில், எல்லா விதயங்களையும் ஒன்றாக ஆராய்ந்து அனுபவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், நீண்ட தூர உறவில், அது கடினமாகிறது. ஒரே நேரத்தில் திரைப்படத்தைப் பார்ப்பது, வீடியோ அழைப்பு மூலம் ஒன்றாகச் சமைப்பது அல்லது ஒருவரின் நாளை விர்ச்சுவலாக ஆராய்வது போன்ற செயல்களைச் செய்வது அதற்கு உதவலாம். மேலும், விடுமுறையையும் ஒன்றாகத் திட்டமிடுங்கள்.

* நம்பிக்கையைப் பாதுகாத்து வையுங்கள் : நம்பிக்கைதான் அனைத்து வலுவான உறவுகளுக்கும் அடித்தளம். உடல் ரீதியான தூரம் இருந்தாலும், இணைப்பு மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பைத் திறம்படத் தக்கவைக்க முடியும். உறவை நிலைநிறுத்துவதற்கு உங்கள் பார்ட்னரை நம்புவது மிகவும் முக்கியம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Relationship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment