Advertisment

குழம்பு, பொறியல், வறுத்த உணவில் இருந்து அதிகப்படியான எண்ணெய்யை அகற்ற எளிதான வழி இதோ!

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்கள் கிரேவியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அதிக சிரமமின்றி விரைவாக அகற்ற ஒரு வழி உள்ளது.

author-image
WebDesk
New Update
Kitchen Tips

Tips to remove excess oil from curry and fried foods

கிரேவிகளை சுவையாக மாற்றும் முயற்சியில், உணவகங்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. வீட்டில் கூட சில சமயங்களில் நமக்குத் தெரியாமல் தேவைக்கு அதிகமாக எண்ணெய் சேர்த்து விடுகிறோம். அத்தகைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

Advertisment

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்கள் கிரேவியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அதிக சிரமமின்றி விரைவாக அகற்ற ஒரு வழி உள்ளது.

@24hrknowledge என்ற ட்வீட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட சமீபத்திய வீடியோவின்படி, சமைத்த கறியிலிருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்றுவதற்கான எளிதான வழி, அதில் ஒரு பெரிய ஐஸ் க்யூப் வைப்பதாகும். அப்படி செய்யும் போது, அதிகப்படியான எண்ணெய் பனிக்கட்டியின் அடியில் சிக்கிக் கொள்கிறது, பின்னர் மேலே படிந்திருக்கும் கொழுப்பை எளிதில் அகற்றி கிரேவியில் இருந்து பிரிக்கலாம்.

அதிகப்படியான எண்ணெயை அகற்ற மற்றொரு வழி கறியை குளிர்விக்க அனுமதிப்பது. அதை ஃப்ரிட்ஜில், சில மணி நேரம் குளிர வைக்கவும். கொழுப்பு மேலே படிந்து கெட்டியாகிவிடும். இப்போது நீங்கள் ஒரு கரண்டியைப் பயன்படுத்தி கொழுப்பை எளிதில் அகற்றலாம்.

பொறியல் செய்யும் போது!

ஒருவேளை நீங்கள் பொறியல் செய்யும்போது தவறுதலாக அதிக எண்ணெய் சேர்த்து விட்டால் கவலைப்பட வேண்டாம்.

காய்கறியின் அளவைப் பொறுத்து சிறிது வறுத்த கடலை மாவு சேர்த்து, காய்கறியை 4-7 நிமிடங்கள் சமைக்கவும். வறுத்த கடலை மாவு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, உணவின் சுவையை அதிகரிக்கும்.

வறுத்த உணவில் இருந்து

எண்ணெய் சரியாக சூடாக இருக்கும் பதத்தில் மட்டும் எப்போதும் உணவை வறுக்கவும்; இது உணவில் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், கடாயில் இருந்து உணவை சமைக்கவும், அகற்றவும் துளையிடப்பட்ட ஸ்பூன் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது, மேலும் வறுத்த உணவை, உறிஞ்சக்கூடிய காகிதத்தில் வைக்க வேண்டும், அது இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் வெளிப்புற எண்ணெயை உறிஞ்சிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment