Advertisment

திருப்பதியில் இப்படியொரு மாற்றமா? 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா?

நன்கொடை வழங்குபவர்களுக்கு, 9 டிக்கெட்டுகள் வரை விஜபி தரிசனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tirupati darshan booking

tirupati darshan booking

tirupati darshan booking : இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம் திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று இது. திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Advertisment

இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம் செல்வோர் திருமலையில் உள்ள கோவிலுக்கு நேரில் செல்ல வேண்டும். ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதன் பிரதிபலிப்பு திருப்பதியில் தெரிய தொடங்கியது. விஜபி தரிசனம் தொடங்கி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதில் அனைத்து மாற்றங்களும் நடைமுறக்கு வந்துள்ளன. அப்படியொரு மாற்றம் தான் நேற்று முதல் திருப்பதியில் அமலான நன்கொடை வழங்கினால் பிரேக் விஐபி தரிசனம் என்ற முறை.

tirupati darshan booking : நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம்!

இனிமேல் திருப்பதி செல்லும் பக்தர்கள் திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளையை (ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலய நிர்மாண அறக்கட்டளை) க்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த நன்கொடையை நேரடியாக தர விரும்பும் பக்தர்கள் திருமலையில் உள்ள கோகுலம் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வரும் தேவஸ்தான அலுவலகத்திற்கு சென்று வழங்கலாம். அப்படி வழங்குபவர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும்.

இதற்கு அவர்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ. 500. இந்த அறிவிப்பின் படி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.99 ஆயிரம் வரை நன்கொடை வழங்குபவர்களுக்கு, 9 டிக்கெட்டுகள் வரை விஜபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பஸ்சில் திருப்பதி செல்ல சரியான நேரம் எது? கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்

தற்போது நேரடியாக மட்டுமே இந்த டிக்கெட்டுக்களை பெற முடியும். அடுத்த மாதம் முதல் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி ஆன்லைன் வழியாக டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

Tirupati
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment