Advertisment

எந்த நேரத்தில் திருப்பதி சென்றால் ஏழுமலையானை சீக்கிரமாக பார்க்கலாம்? திருப்பதி குறிப்புகள் இதோ

வைகுண்டம் 1, வைகுண்டம் 2 ஆகிய பக்தர்கள் காத்திருப்பு அறையில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் பக்தர்கள் காக்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tirupati room booking

tirupati room booking

tirupati darshan ticket : உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

Advertisment

அதிலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில் கருடன் சேவை உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

திருப்பதியில் குவியும் பக்தர்கள்.. அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

இதனை நேரில் காண, பக்தர்கள் பலரும் திட்டமிட்டுள்ளனர். அப்படி குடுப்பத்துடன் வரும் நாட்களின் திருப்பதி செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் கட்டாயம் இந்த குறிப்புகளை தெரிந்துக் கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

tirupati darshan booking : திருப்பதி தர்ஷன் குறிப்புகள்!

திருப்பதியில் தினமும் சராசரியாக 60,000 - 80,000 பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை பக்ரித் பண்டிகை காரணமாக அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால், தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், திருப்பதிக்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதன் காரணமாக தற்போது திருப்பதியில் பக்தர்கள் வைகுண்டம் 1, வைகுண்டம் 2 ஆகிய பக்தர்கள் காத்திருப்பு அறையில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் பக்தர்கள் காக்க வைக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க விரும்புவர்கள் இரவு நேரம் உங்கள் பயணத்தை தொடங்கினால் விடியற்காலையில் ஏழுமலையானை விரைவாக தரிசிக்கலாம்.

பிரம்மோற்சவத்தின்போது பக்தர்களுக்கு தரிசனம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். விழாவில் 3500 ஸ்ரீவாரி சேவகர்கள், 1000 சாரண சாரணியர் பக்தர்களுக்கு சேவை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் எல்1, எல்2, எல் 3 என்று மூன்று வகையான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்பட்டது. இந்த நடைமுறை பிரம்மோற்சவத்திலும் கடைப்பிடிக்கப்படும். எனவே, விஜபி தரிசனம் என்பதே திருப்பதியில் இனி கிடையாது.

அலப்பிரி மெட்டு வழியாக பக்தர்கள் செல்லாமல். 24 மணி நேரமும் இது இயங்கும். இதற்கான டோக்கன்கள் 24 மணி நேரமும் வழங்கப்படும்.சாமியை விரைவாக தரிசிக்க ஸ்ரீப்பரி மெட்டு வழியே சிறந்தது. 2 மணி நேரம் எடுக்கும். அலப்பிரி மெட்டு வழியாக சென்றால் 4 மணி நேரம் 30 வினாடிகள் ஆகும்.

என் ஆர்.ஐக்கள் தர்ஷன் டிக்கெட் பெறும் நேரம் மதியம் 12 மணி முதல் மாலை 6.மணி வரை மட்டுமே. உங்களின் தர்ஷன் டிக்கெட் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுப்படியாகும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment